குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தக் குடியுரிமைச் சட்டத்தைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாளை சென்னையில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என அறிவித்தது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ''குடியுரிமைச் சட்டத்திருத்தத்தால் இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தொடர்ந்து வதந்திகள் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்றத்திலும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடமும் வலியுறுத்தியுள்ளோம். எனவே பொதுமக்கள் தவறான பரப்புரைகளுக்கு செவி சாய்க்காமல், அமைதி காக்கவேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது மத்திய அரசு'