ETV Bharat / state

Omicron spreads : ஒமைக்ரான் தொற்று குறித்த விவரங்களை நாள்தோறும் வெளியிட வேண்டும் - முதலமைச்சர்

Omicron spreads : ஒமைக்ரான் நோய்த்தொற்று குறித்த விவரங்களையும்,வெளிநாட்டுப் பயணிகள் வருகையையும் நாள்தோறும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Omicron spreads : ஒமிக்ரான் தொற்று குறித்த விபரங்களை நாள்தோறும் வெளியிட வேண்டும் - முதலமைச்சர்

author img

By

Published : Dec 26, 2021, 4:00 PM IST

சென்னை:Omicron spreads :பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், நாள்தோறும் வெளிநாட்டுப் பயணிகளின் வருகை மற்றும் ஒமைக்ரான் குறித்த விவரங்களை தினசரி அறிக்கையில் கூடுதலாக வெளியிட முதலமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், ஒமைக்ரான் வகைக் கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சர் ஆய்வு:

தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24ஆம் தேதி ஒமைக்ரான் பரவலைத் தடுக்க, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் இதர துறைகளுடன் இணைந்து எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதன்தொடர்ச்சியாக இன்று ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையத்தினைப் பார்வையிட்டு, அங்கு கோவிட் நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் குணப்படுத்த ஏற்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார்.

மேலும், தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள அவசரகால ஆக்சிஜன் சிலிண்டர் சேமிப்புக் கிடங்கினையும், உயிர் காக்கும் அவசர சிகிச்சை உபகரணங்களுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களையும் பார்வையிட்டார்.

பின்னர், 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அவசர கால அழைப்பு நிலையம், அவசரகால கட்டுப்பாட்டு அறை மற்றும் மாநில கட்டளை மையத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தேவையான அறிவுரைகளை வழங்கினார். பின்னர் இந்த வளாகத்தில் செயல்பட்டு வரும் 24 மணிநேர கரோனா தடுப்பூசி மையத்தினையும் ஆய்வு செய்தார்.

ஒமைக்ரான் முன்னெச்சரிக்கை:

ஒமைக்ரான் வகைக் கரோனா நோய்த்தொற்று பரவலைத்தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1.15 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், தற்காலிக கோவிட் சிறப்பு மையங்களில் தேவைக்கேற்ப 50,000 படுக்கைகள் வரை ஏற்படுத்த ஆணை வழங்கப்பட்டு, அவற்றை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த கோவிட் அலையின் போது ஏற்பட்ட மருத்துவ ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டினை முழுதும் நீக்கும் வகையில் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 222 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை நிறுவியதால், கூடுதலாக நாள்தோறும் 244 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், திரவ ஆக்ஸிஜன் இருப்பு வைக்கும் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு, 1,731 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் சேமித்து வைக்க வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 17,940 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மூலம் 167 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இவைத் தவிர சுமார் 25,000 பி மற்றும் டி வகை ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் தயார் நிலையில் உள்ளன.

விமான நிலையங்களில் சோதனை:

ஒமைக்ரான் வகை கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி ஆர்டிபிசிஆர் பரிசோதனை மற்றும் தேவையான அனைத்துக் கட்டுப்பாடுகளும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், நாள்தோறும் வெளிநாட்டுப் பயணிகளின் வருகை மற்றும் ஒமைக்ரான் குறித்த விவரங்களை தினசரி அறிக்கையில் கூடுதலாக வெளியிட முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

இதுவரை தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசியினை 85 விழுக்காட்டினரும், இரண்டாம் தவணை தடுப்பூசியினை 55 விழுக்காட்டினரும் செலுத்தியுள்ளனர்.

நாட்டில் ஒமைக்ரான் நோய்த்தொற்று அச்சுறுத்தல் உள்ள நிலையில் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்தி கரோனா நோய்த்தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், நோய்ப் பரவலைத் தடுக்க உதவுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், கரோனா நோய் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் தவறாமல் தொடர கேட்டுக்கொள்ளப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:17 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் - கடலூர் கடற்கரை பகுதிகளில் அஞ்சலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.