தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள உகாதி தின வாழ்த்துச் செய்தியில், பேசும் மொழி வேறாய் இருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வோடு, தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னடமொழி பேசும் மக்கள் பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களின் உணர்வுகளுடன் இரண்டறக் கலந்து, சகோதர, சகோதரிகளாய், அவர்தம் இன்ப, துன்பங்களில் பங்கேற்று ஒற்றுமையாய் வாழ்ந்துவருவது தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
மலரும் இப்புத்தாண்டு, உங்கள் அனைவரது வாழ்விலும் வளமும், நலமும், வெற்றிகள் பலவும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னடமொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை இதயம் கனிந்த உகாதி திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இத்தகைய பண்டிகைகள், நமது நாட்டின் ஒருமித்த வளமான பண்பாட்டையும், பாரம்பரிய தொடக்கத்தையும் பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளார். இப்பண்டிகைகள் நம்முடைய வாழ்விற்கு செழிப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டுவர வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாடு முழுவதும் ஹோலி கொண்டாட்டம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து