ETV Bharat / state

'மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை எடுத்துக் கூற வேண்டும்' - அதிமுக எம்எல்ஏகள் கூட்டத்தில் முடிவு

பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை எடுத்துக் கூற வேண்டும் என அதிமுக எம்எல்ஏகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Aug 14, 2021, 1:27 AM IST

அதிமுக எம்எல்ஏ கூட்டம்
அதிமுக எம்எல்ஏ கூட்டம்

சென்னை: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று (ஆக.13) தாக்கல் செய்யப்பட்டது. நாளை(ஆக.14) வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதிமுக எம்எல்ஏ கூட்டம்
அதிமுக எம்எல்ஏ கூட்டம்

இந்நிலையில் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

அதிமுக எம்எல்ஏ கூட்டம்
அதிமுக எம்எல்ஏ கூட்டம்

அப்போது விவாதத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் தங்களை எவ்வாறு தயார் படுத்திக்கொள்ள வேண்டும். துறை வாரியாக என்னென்ன விவகாரங்களை குறிப்பிட்டு பேச வேண்டும் என்பது குறித்து உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஆளும் கட்சியினர், அதிமுகவை விமர்சித்து பேசும் போது அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது எனத் தெரிகிறது. மேலும், கூட்டத் தொடரில் முழுவதுமாக பங்கேற்கலாமா அல்லது புறக்கணிக்கலாமா என்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில், கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை எவ்வாறு எடுத்து கூற வேண்டும் என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது.

இதையும் படிங்க: கிராமப்புறங்களில் வீடு வழங்கும் திட்டத்துக்கு ரூ.3,548 கோடி ஒதுக்கீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.