சென்னை: இன்றுமுதல் (பிப்ரவரி 2) வரும் 6ஆம் தேதிவரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்தநாளன்று அஜித்தின் 'வலிமை' திரையரங்குகளில்...