இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ஜூன் 1ஆம் தேதி நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை:
- தமிழ்- 15/06/2020
- ஆங்கிலம்- 17/06/2020
- கணிதம்- 19/06/2020
- பிற மொழிப் பாடம்- 20/06/2020
- அறிவியல்- 22/06/2020
- சமூக அறிவியல்- 24/06/2020
- தொழிற்கல்வி- 25/06/2020
அதையடுத்து 26/03/2020 நடைபெறவிருந்த 11ஆம் வகுப்பு வேதியியல், கணக்கியல், புவியியல் தேர்வுகள் 16/06/2020 அன்று நடைபெறும். 24/03/2020 நடைபெறவிருந்த 12ஆம் வகுப்பு வேதியியல், கணக்கியல், புவியியல் பொதுத் தேர்வுகள் 18/06/2020 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் 144 உத்தரவை நீட்டித்து உத்தரவிட்ட காவல் ஆணையர்!