ETV Bharat / state

சுயலாப போராட்டங்கள் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர் - தமிழிசை

சென்னை: இந்தி திணிப்பு பொய் பரப்புரை வேண்டாம் என தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

File pic
author img

By

Published : Jun 2, 2019, 2:38 PM IST

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் பள்ளிக்கூடங்களில் மும்மொழிக் கொள்கையை கொண்டுவர கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை செயல்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் பல்வேறு கட்சிகள் தொடர் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

இந்த முடிவை கைவிடாவிட்டால் போராட்டங்கள் நடக்கும் என கட்சிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

'மும்மொழிக்கொள்கை கஸ்தூரி குழு அனுப்பியுள்ள பரிந்துரையை மத்திய அரசு இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ஆனால் அதற்கு முன்பே இந்தி திணித்து விடுவதைப்போல ஸ்டாலின், வைகோ, முத்தரசன், சிதம்பரம் போன்றவர்கள் கூட கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றனர். இந்தி திணிப்பை காரணமாகக் கொண்டு சுயலாப போராட்டங்கள் நடத்தலாம் என ஆயத்தமாகிவருகிறார்கள்.

முன்னாள் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெளிவாகச் சொல்லிவிட்டார், எந்த மொழியும் எந்த மாநிலத்திலும் திணிக்கப்படாது. அதே போல் இன்றைய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நிஷாங்கும் இந்தி திணிக்கும் எண்ணமில்லை என்று கூறியிருக்கிறார். மும்மொழிக் கொள்கை என்பது பரிந்துரைத்தால் மட்டுமே கொள்கை முடிவல்ல.

காங்கிரஸ் முதலமைச்சர் பக்தவச்சலம் ஆட்சி காலத்தில்தான் இந்தி திணிப்பும், எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடந்தது. அதை எல்லாம் மறந்துவிட்டு இன்றைய காங்கிரஸ்காரர்கள் திமுகவுடன் சேர்ந்து இந்தியை எதிர்ப்பதாக சொல்கின்றனர்' என்று தெரிவிக்கப்பட்டது.

ஸ்டாலின்,வைகோ,முத்தரசன்,சிதம்பரம் போன்றவர்கள் சுயநல போராட்டம் நடத்த துடிக்கின்றனர் -தமிழிசை காட்டம்  

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் பள்ளிக்கூடங்களில் மும்மொழி கொள்கையை கொண்டுவர கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை செயல்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் பல்வேறு கட்சிகள் தொடர் கண்டனம் தெரிவித்து வருகின்றன .இந்த முடிவை கைவிடாவிட்டால் போராட்டங்கள் நடக்கும் என கட்சிகள் தெரிவித்திருந்தநிலையில் ,இந்தி திணிப்பு பொய் பிரச்சாரம் வேண்டாம் என  தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக  தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :

இந்தியாவில் புதிய கல்விக்கொள்கையை அதற்கான அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் குழு மத்திய அரசுக்கு  ஓர் பரிந்துரை அனுப்பியுள்ளது.அது ஓர் பரிந்துரைத்தான் ... அந்த பரிந்துரையில் மும்மொழிக்கொள்கை பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அது மத்திய அரசாளும் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை,முடிவும் செய்யப்படவில்லை ஆனால் அதற்கு முன்பே  ஏதோ இந்தி திணித்து விடுவதைப்போல ஸ்டாலின்,வைகோ,முத்தரசன்,சிதம்பரம் போன்றவர்கள் கூட கடுமையான கண்டனத்தை இல்லாத இந்தி திணிப்பை நோக்கி செலுத்தியிருக்கிறார்கள். எங்கேயாவது போராட்டம் நடத்த வழி கிடைக்காதா?  என தேடித்திரிபவர்களுக்கு இல்லாத இந்தி திணிப்பை காரணமாகக் கொண்டு சுயலாப போராட்டங்கள் நடத்தலாம் என ஆயத்தமாகி வருகிறார்கள்.

மத்தியில் ஆட்சிக்கு வரமுடியவில்லை என்று ஏங்கிக்கொண்டிருந்தார்கள்.இல்லாத இந்தி திணிப்பை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.முன்னாள் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெளிவாகச் சொல்லிவிட்டார் எந்த மொழியும் எந்த மாநிலத்திலும் திணிக்கப்படாது  என்று. அதே போல் இன்றைய மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நிஷாங் அவர்களும் இந்தி திணிக்கும் எண்ணமில்லை என்று கூறியிருக்கிறார். இதே கருத்தை பிரதமர் அலுவலகமும் தெரிவித்து இருக்கிறது

மும்மொழிக்கொள்கை என்பது பரிந்துரைத்தல்  மட்டுமே ,கொள்கை முடிவல்ல என்பதையும்,தெளிவாகச் சொன்ன பிறகும் ஏதோ இந்தி திணிக்கப்பட்டதை போல தொலைக்காட்சிகள் கருத்துக்களை தெரிவிப்பது சரியல்ல.இல்லாத கறுப்புப் பூனையை இருட்டில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

கஸ்தூரிரங்கன்  அறிக்கை எப்படி இப்படி ஒரு அறிக்கை தரலாம் என ஸ்டாலின் கேட்கிறார்.அறிக்கை கொடுக்கலாம் அதை ஏற்றுக்கொண்டால்தானே கொள்கைமுடிவு ? நான் கேட்கிறேன் ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சி கையெழுத்திட்டார்.

ஏன்  ஆராய்ச்சி அனுமதித்து கையெழுத்திட்டார்.முதலிலேயே முடியாது என்று ஏன் சொல்லவில்லை?

ஆக  இனித்தால் படிக்கலாம் திணித்தல் இல்லையென்றும் சொல்லியாகிவிட்டது.விருப்பம் இருந்தால் படிக்கலாம் வெறுப்பு இருந்தால் வேண்டாம் என்றும் சொல்லியாகிவிட்டது. தேவையென்றால் படிக்கலாம் தேவை இல்லையென்றால் விட்டுவிடலாம் வெறும் இது  வரைவு அறிக்கைதான்ஆக ஏதாவது காரணம் கிடைக்காதா?போராட்டம்  நடத்த   எனக் காத்துக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள் ஏமாந்துதான் போவார்கள் .

அதைவிட வேடிக்கை காங்கிரஸ் முதல்வர் பக்தவச்சலம் ஆட்சி காலத்தில்தான் இந்தி திணிப்பும்,எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கி சூடும் நடந்தது. அதை எல்லாம் மறந்துவிட்டு இன்றைய காங்கிரஸ்காரர்கள் திமுகவுடன் சேர்ந்து இந்தியை எதிர்ப்பதாக சொல்வதுதான் நாடகம்.இந்தியை மத்திய அரசின் அலுவல்களில் பயன்பாட்டை அதிகரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக செயல்பட்ட ப.சிதம்பரம் இன்று இந்தி பயன்பாட்டை கண்டிப்பது வேடிக்கை?

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.