ETV Bharat / state

ஜப்பான் சென்ற தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள்.. அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்!

Educational Tour In Japan: தமிழ்நாட்டில் இருந்து கல்விச் சுற்றுலாவிற்கு ஜப்பான் சென்றுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜப்பான் தமிழ் சங்கத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Educational Tour In Japan
கல்விச் சுற்றுலா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 8:10 AM IST

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறையின் முன்னெடுப்பாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இருந்து பல்வேறு போட்டிகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், 50 பேர் கல்விச் சுற்றுலாவுக்காக ஜப்பான் சென்றுள்ளனர். அப்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஜப்பானில் உள்ள பள்ளிக்கூடங்களுக்குச் சென்று பார்வையிட்டார்.

  • அரசுப் பள்ளி மாணவர்களுடனான கல்விச் சுற்றுலாவில் தென்கொரிய நாட்டிற்கு பயணமானோம்!

    தென்கொரிய அரசால் நடத்தப்படும் அரசுப் பள்ளியைப் பார்வையிட்டு, தென்கொரிய தமிழ்ச் சங்கத்தினரின் அன்பான வரவேற்பை ஏற்று தென்கொரியாவில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் மாணவர்களோடு கலந்துரையாடினோம்.… pic.twitter.com/tLbKBd6l3n

    — Anbil Mahesh (@Anbil_Mahesh) November 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அரசுப்பள்ளி மாணவர்கள், ஜப்பானில் வாழும் தமிழர்களைச் சந்தித்து உரையாடல் நிகழ்த்தும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்வில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரசன்னா பார்த்தசாரதி அரசு பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் வரவேற்றார்.

"திரைகடல் ஓடியும்" என்ற தலைப்பில் ஜப்பானில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வரும் முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்களின் அறிமுக காணொளி ஒளிபரப்பப்பட்டது. அரசுப் பள்ளியில் படித்து முதல் தலைமுறை பட்டதாரியாக உருவாகி, உலகளவில் திறம்பட பணிபுரியும் தமிழர்கள், தற்போது கல்விச் சுற்றுலாவிற்காக வந்திருக்கும் மாணவர்களிடம் தங்களது பணி அனுபவம், மற்றும் ஜப்பானிற்கு படிக்க அல்லது வேலைக்காக வருவோருக்குத் தேவையான அடிப்படை விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ஜப்பானில் உள்ள கல்வி, வேலை வாய்ப்புகளைப் பற்றி பிரசன்னா பார்த்தசாரதி, கணேஷ் பாண்டியன் நமச்சிவாயம், குமரவேல் திருமணஞ்சேரி, ஆசிரியை கண்மணி கோவிந்தசாமி, ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் பகிர்ந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, ஜப்பான் தமிழர்கள் மூலம் சிறப்பான பறையாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள், டோக்கியோவில் உள்ள மிராய்க்கன் தேசிய அறிவியல் அருங்காட்சியத்திற்கும், ஜப்பானில் உள்ள பள்ளிகளுக்கும் சென்று வந்தனர். அதனைத் தொடர்ந்து, நானோ தொழில்நுட்பத்தில் உலகளவில் சிறந்து விளங்கும் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மூன்று மணி நேரம் செலவிட்டு, அறிவியலின் நேரடி பயன்பாட்டை கற்றறிந்தனர். இதற்கான ஏற்பாட்டை ஜப்பான் தமிழ் சங்கம் அமைப்பினர் செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் கல்வியும், சுகாதாரமும் தனது இரு கண்கள் எனக் கூறி, பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். காலை சிற்றுண்டித் திட்டத்தால் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.

காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் வெறும் வயிற்றுடன் வந்து இறை வணக்கக் கூட்டத்தில் நிற்க முடியாது என்பதையும், வகுப்பில் பாடத்தை கவனிக்க முடியாது என்பதை உணர்ந்ததால்தான் காலை சிற்றுண்டித் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாய் உள்ளத்தோடு கொண்டு வந்துள்ளார்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று வந்த மாணவர்கள், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழ் மாெழியை கற்றுத் தருவதற்கு பயன்படுத்தப்படும் வீடியோவை ஜப்பான் தமிழ் சங்கத்தினரும் பயன்படுத்திக் காெள்ளலாம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஸ்மார்ட் வாட்ச்சால் காவலர் பணியிடை நீக்கம்.. தவறான சிகிச்சையால் மருத்துவர் கைது - சென்னை குற்றச் செய்திகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.