ETV Bharat / state

வெளி நாடுகளில் சிக்கித் தவித்த 348 தமிழர்கள் மீட்பு!

சென்னை : வெளி நாடுகளில் சிக்கித் தவித்த 348 தமிழர்கள் மூன்று சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

Tamil people rescued from Singapore, hongkong, russia on vandhe bharat scheme

author img

By

Published : Jun 21, 2020, 12:59 PM IST

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பல தளர்வுகளுடன் வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளின் அடிப்படையில் கடந்த மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கிய போதிலும், சர்வதேச விமான சேவைக்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.

இதனால் உலகின் பல்வேறு நாடுகளிலும் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, மத்திய அரசு ’வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று சிங்கப்பூர், ஹாங்காங், ரஷ்யா ஆகிய நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இதில், சென்னை வந்த ’ஏா் இந்தியா’ சிறப்பு விமானத்தில் 178 பேர், ஹாங்காங்கிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ’ஏா் இந்தியா’ சிறப்பு விமானத்தில் 26 பேர் என மொத்தம் 204 போ் இன்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனா்.

மேலும், ரஷ்யாவின் மாஸ்கோ நகரிலிருந்து டெல்லி வழியாக இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னை வந்த ஏா் இந்தியா சிறப்பு விமானத்தில், 185 ஆண்கள், 149 பெண்கள், 14 சிறுவர்கள் என மொத்தம் 144 பேர் வந்தடைந்தனர்.

இவா்கள் அனைவருக்கும் சென்னை விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைகள், சுங்கப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். இவா்களில் 149 பேர் மேலக்கோட்டையூா் விஐடி கல்வி நிறுவனத்தில் இலவசமாகவும், 193 பேர் தனியார் விடுதிகளில் கட்டணம் செலுத்தியும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில், உடல் நலம் பாதித்த மூன்று பேரில் இரண்டு பேர் புதுக்கோட்டைக்கும், ஒருவர் சென்னை அடையாறு மருத்துவமனைக்கும் அவசர ஊர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதையும் படிங்க : 'கரோனா எப்போது முடிவுக்கு வரும் என இறைவனுக்கே தெரியும்' - முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.