ETV Bharat / state

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து!

தமிழ் புத்தாண்டு, அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து கூறியுள்ளார்.

Tamilisai Soundararajan
Tamilisai Soundararajan
author img

By

Published : Apr 13, 2021, 3:46 PM IST

தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று (ஏப்.13) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

"சித்திரை 1ஆம் தேதியான இந்த தமிழ் புத்தாண்டானது, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவும், வளம் கூட்டும் வாழ்க்கை மலர்ந்து ஒளிகூட்டும் ஒளிமயமான வாழ்க்கையை தமிழருக்கு வழங்கட்டும்.

தமிழ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்ற இந்த நேரத்தில் உலகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனா பெருந்தொற்று நோயை வென்றிடவும் இப்புத்தாண்டு நமக்கு வழிவகுக்கட்டும். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"சமுதாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளைக் கடுமையாக சாடிய அண்ணல் அம்பேத்கர், தீண்டாமையை எதிர்த்துப் போராடினார். தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான முன்னேற்றத்திற்குப் போராடினார். அவர் காட்டிய வழியில் கரோனாவுக்கு எதிராக போராடும் இவ்வேளையில் ஏழை, எளிய மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து நம் சகோதர, சகோதரிகளைப் பாதுகாக்க பாடுபடுவோம் என்று அவரது பிறந்த நாளில் சபதமேற்போம்" என்றும் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை (ஏப்.14) தனது செய்திக் குறிப்பில் நினைவுகூர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்களுக்கு விரைவில் கரோனா தடுப்பூசி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.