ETV Bharat / state

3 மாவட்டங்களில் செப்.30 கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்! - IMD report

Tamil Nadu Rain Update: நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் செப்டம்பர் 30ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 4:21 PM IST

சென்னை: நாளை முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தென்மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளான நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் செப்டம்பர் 30ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று (செப்-26) விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு அவ்வப்போது, கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேப்போல், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்

மழைப்பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக பெருந்துறை (ஈரோடு), நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) தலா 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து, செய்யார்(திருவண்ணாமலை), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை) தலா 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

இதேப்போல், காஞ்சிபுரம், தஞ்சை, திருச்சி, திருவள்ளூர், விழுப்புரம், திருபத்தூர், செங்கல்பட்டு, சென்னை, பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி,கடலூர், அரியலூர்,ராணிப்பேட்டை, நீலகீரி, சிவகங்கை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 5.செ.மீ முதல் 1.செ.மீ வரை கடந்த 24 மணிநேரத்தில் (செப்-26) மதியம் 12.00 மணி வரை மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: செப்.29,30 தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதைபோல் நாளை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அவதூறு கருத்து! ஆர்.பி.வி.எஸ்.மணியன் ஜாமீன் மனு தள்ளுபடி! சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.