சென்னை: இது குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கைக்குழுத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், பல்கலைக்கழக இணையதளமான www.tanuvas.ac.in / www2.tanuvas.ac.in மூலம் கடந்த 9ஆம் தேதி காலை 10 மணிமுதல் அக்டோபர் 8 மாலை 6 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
இதில் செப்டம்பர் 26 வரை கால்நடை மருத்துவ Bvsc&A.H பட்டப்படிப்பிற்கு 15 ஆயிரத்து 732 மாணவர்களும், பிடெக் பட்டப்படிப்புகளுக்கு 3,026 மாணவர்களும், மொத்தம் 18 ஆயிரத்து 758 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினருக்கான இடங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் வரும் நவம்பர் 8ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்களுக்குப் பல்கலைக்கழக www.tanuvas.ac.in, www.2.tanuvas.ac.in) இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!