ETV Bharat / state

திமுக கூட்டணி அமோக வெற்றி! தொண்டர்கள் கொண்டாட்டம் - திமுக கூட்டணி அமோக வெற்றி

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது.

திமுக கூட்டணி அமோக வெற்றி
திமுக கூட்டணி அமோக வெற்றி
author img

By

Published : Feb 22, 2022, 10:48 PM IST

Updated : Feb 22, 2022, 10:54 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 12,838 பதிவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சியில் 4 பேர், நகராட்சியில் 18 பேர், பேரூராட்சியில் 196 பேர் என மொத்தம் 218 பேர் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டனர்.

வேட்புமனுக்கள் நிராகரிப்பு, திரும்பப் பெற்றதுபோக மொத்தம் 57,778 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (பிப்ரவரி 22) காலை தொடங்கியது. இதற்காக சென்னை மாநகராட்சியில் 15 வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 268 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டன.

மூன்றடுக்குப் பாதுகாப்பு

வாக்கு எண்ணிக்கை மையங்களில் அசம்பாவிதத்தைத் தடுக்க மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டது. அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களும் சிசிடிவி மூலம் காண்காணிக்கப்பட்டன.

முதல்கட்டமாக அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை தீவிரமாகவும் சில இடங்களில் போதிய வசதி இல்லாததால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகவும் நடைபெற்றது.

தொடக்கத்தில் இருந்தே திமுக முன்னிலை

தொடக்கத்தில் இருந்தே திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றது. நேரம் செல்லசெல்ல அவை அனைத்தும் வெற்றிகளாக மாறின.

இரவு 10:30 நிலவரப்படி, 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. 138 நகராட்சியில் திமுக 134 இடங்களையும், அதிமுக 1 இடத்தையும் பிடித்துள்ளது. 489 பேரூராட்சிகளில் திமுக 435 இடங்களையும், அதிமுக 16 இடங்களையும் பிடித்துள்ளது.

வார்டுகள் விவரம்

1,373 மாநகராட்சி வார்டுகளில் திமுக 1,100 இடங்களையும், அதிமுக 164 இடங்களையும் பிடித்துள்ளது. 3,842 நகராட்சி வார்டுகளில் திமுக 2,631 இடங்களையும், அதிமுக 639 இடங்களையும் பிடித்துள்ளன. 7,604 பேரூராட்சி வார்டுகளில் திமுக 4,958 இடங்களையும், அதிமுக 1,215 இடங்களையும் பிடித்துள்ளன.

இதையும் படிங்க: நகர்ப்புற தேர்தல் 2022: திமுக கூட்டணி அமோக வெற்றி

Last Updated : Feb 22, 2022, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.