ETV Bharat / state

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அறிவிப்புகள் - chennai latest news

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

-urban-habitat-development
-urban-habitat-development
author img

By

Published : Sep 1, 2021, 9:21 PM IST

சென்னை : குடிசைமாற்று வாரியம், இனி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என செயல்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தற்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில்,

  • சிதிலமடைந்த 7 ஆயிரத்து 500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் நடப்பு நிதியாண்டில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மறுகட்டுமானம் செய்யப்படும்.
  • மேம்படுத்தப்பட்ட மனைகள் முழுத்தொகை செலுத்திய 10 ஆயிரம் குடும்பங்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள விற்பனை பத்திரம் வழங்கப்படும்.
  • வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செலுத்திய 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நடப்பு நிதியாண்டில் விற்பனை பத்திரம் வழங்கப்படும்.
  • கட்டுமானப் பணிகளின் தரத்தினை பல்வேறு நிலைகளில் உறுதி செய்ய இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் அண்ணாப் பல்கலைக்கழக போன்ற மேன்மையான மூன்றாம் தரப்பு தரக்கட்டுப்பாடு வல்லுநர் குழு அமைக்கப்படும்.
  • மறுகட்டுமானம் செய்யும் காலத்தில் பயனாளி வழங்கப்படும் தொகை 8 ஆயிரம் கருணைத் தொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • பராமரிப்பின்றி பழுதடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் 70 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும்.
  • குடியிருப்போர் நலச்சங்க பங்களிப்புடன் 'நம் குடியிருப்பு - நம் பொறுப்பு' என்ற திட்டத்தின்கீழ் அடிப்படை வசதி மேற்கொள்ளப்படும்.
  • வசதியற்ற பயனாளிகளின் சிரமத்தைக் குறைக்க வங்கிக்கடன் பெற்று பங்களிப்புத் தொகை செலுத்தப்படும்.
  • புதிய குடியிருப்புகளில் மாற்றுத்திறனாளிகள் தேவைக்கேற்ப வசதி முன்னுரிமை அடிப்படையில் தரைதள வீடுகள் ஒதுக்கப்படும்.
  • தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் குடிசைப்பகுதி வாழ் இளைஞர்களுக்கு முழு நிதி வழங்கி விளையாட்டுத்திறன் மேம்படுத்தப்படும்.
  • குடிசைப் பகுதிகளில் வாழும் 10 ஆயிரம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கி வேலை வாய்ப்பு பெற ஊக்குவிக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : புளியந்தோப்பு விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.