ETV Bharat / state

மின்சார வாகனங்களுக்கு 100% வரி விலக்கு - தமிழக அரசு அறிவிப்பு!

author img

By

Published : Sep 17, 2019, 11:56 AM IST

சென்னை: சுற்றுச் சூழலை பதுகாக்கும் வகையில்  மின்சார வாகன கொள்கை-2019 வகுக்கப்பட்டுள்ளது. இதில் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/17-September-2019/4463400_289_4463400_1568698107208.png

சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் மின்சார வாகன கொள்கை-2019 வகுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கொள்கையின்படி அனைத்து மின்சார இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், பேருந்துகள், இலகு ரக சரக்கு வகனங்கள் ஆகியவற்றிற்கு 2022-ஆம் ஆண்டு வரை, 100 சதவீதம் மோட்டார் வாகன வரி விலக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  • தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும், விற்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 2030 வரை மாநில ஜி.எஸ்.டி. வரி (பொருட்கள் மற்றும் சேவை வரி) 100 சதவீதம் திரும்ப வழங்கப்படும்.
  • மின்சார வாகனங்கள் உற்பத்திக்கான முதலீடுகளுக்கு 15 சதவீதம் வரையும், பேட்டரி உற்பத்திக்கான முதலீடுகளுக்கு 20 சதவீதம் வரையும் மூலதன மானியம் வழங்கப்படும். இந்தச் சலுகை 2025 வரை வழங்கப்படும்.
  • அரசு தொழிற்பூங்காக்களில் மின்சார வாகனங்கள், மின்னேற்று உபகரணங்கள், மின்கலன்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைக்க முன்வரும் நிறுவனங்களுக்கு, நிலத்தின் விலையில் 20 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும்.
  • தென் மாவட்டங்களில் செய்யப்படும் இவ்வகை முதலீடுகளுக்கு, நிலத்தின் மதிப்பில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். இந்தச் சலுகை 2022 வரையிலான முதலீடுகளுக்கு பொருந்தும்.
  • இத்தகைய நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்கும்போது 100 சதவீத முத்திரைத்தாள் கட்டண விலக்கு அளிக்கப்படும். இந்தச் சலுகை 2022 வரையிலான முதலீடுகளுக்கு பொருந்தும், 100 சதவீதம் மின்சார வரி விலக்கு அளிக்கப்படும்.
  • வாகன உற்பத்தி அதன் உபகரணங்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் 2025 வரை உருவாக்கும் ஒவ்வொரு புதிய வேலை வாய்ப்புக்கும் நிறுவனங்களின் பங்களிப்பாக செலுத்திய தொழிலாளர் சேம நல நிதிக்கு ஈடான தொகை மானியமாக வழங்கப்படும்.
  • வாகன உற்பத்தி மையங்களிலும், மிசார வாகன உற்பத்தியில் முதலீடுகளை ஈர்க்கும் திறன் உடைய பகுதிகளிலும் அரசு சார்பில் பிரத்யேகமாக மின்சார வாகன உற்பத்தி தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படும்.
  • நகரங்கள், பிற இடங்களில் மின்சார வாகனங்களுக்கான மின்னேற்று வசதிகளை உருவாக்கத் தேவையான கொள்கை ஆதரவு வழங்கப்படும். தமிழ்நாடு மின் உற்பத்தி & பகிர்மான கழகம், மின்னேற்று வசதிகளை, சொந்தமாகவோ, தனியார் பங்களிப்பு மூலமாகவோ ஏற்படுத்தும்.
    e-vehicle policy
    மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு
  • உணவகங்கள், வணிக வாளகங்கள், தியேட்டர்கள் போன்ற அனைத்து வணிக கட்டடங்களிலும் மின் ஏற்று வசதி ஏற்படுத்துவது உறுதி செய்யப்படும்.
  • அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கு தேவையான நிதி உதவிகள் வழங்கப்படும்.
  • மூன்று சக்கர மின்சார வாகனங்களுக்கு திறந்த நிலை அனுமதி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
  • நகரங்களில் உள்ள அனைத்து புதிய கட்டுமானகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் திட்டமிடல் நிலையிலேயே மின்சார வாகனங்களுக்கான மின்னேற்று வசதிகளை ஏற்படுத்தும் வகையில், கட்டடம் மற்றும் கட்டுமானச் சட்டங்களில் தேவையான மாறுதல்கள் செய்யப்படும்.
  • தமிழ்நாடு அரசு மின்சார வாகன உற்பத்தி துறையில் புதிதாக தொழில் துவங்குவோருக்கு தனி கவனத்துடன் ஊக்கமளிக்கும்.
  • இரு சக்கர வாகனங்களுக்கு 2022 வரை 100 சதவீதம் சாலை வரி விலக்கு அளிக்கபடும். பதிவுக் கட்டணம் விலக்கிக் கொள்ளப்படும். மூன்று, நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி கட்டணம், சாலை வரி, பதிவுக் கட்டணம் ரத்து செய்யப்படும்.
  • இலகு ரக சரக்கு வாகனங்களுக்கும் சாலை வரி, பதிவுக் கட்டணம் 2022 வரை கிடையாது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.