ETV Bharat / state

'கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தனியார் பள்ளிகள் வேறு மாநிலம் செல்லலாம்'

author img

By

Published : Dec 14, 2022, 5:57 PM IST

தமிழ்நாடு அரசின் கல்விக்கொள்கையை தனியார் பள்ளிகள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் பிற மாநிலங்களுக்குச் சென்று கல்விச்சேவையை தொடங்கட்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன்

சென்னை: தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கும் குழவினருடன் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். மேலும் பள்ளிகளில் மும்மொழி கற்கவும், தேசியக் கல்விக்கொள்கையை அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் தியாகராஜன் கூறுகையில், “மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கையில் பல்வேறு முரண்பாடுகள் இருந்ததால் அதை நிராகரிக்க வேண்டும் என்று அனைத்து ஆசிரியர்கள் சங்கமும் கோரிக்கை வைத்தோம்.

முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின் அந்த கல்விக்கொள்கையை விடுத்து, தமிழ்நாட்டிற்கு அரசுக்கு என தனி கள்விக்கொள்கையை கொண்டு வர ஒரு குழு ஏற்படுத்தி உள்ளார். அந்தக்குழுவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மாநிலத்திற்கு என தனியாக கல்விக் கொள்கையை உருவாக்கி இந்தியாவிற்கே முன் மாதிரியாக முதலமைச்சர் செயல்படுகிறார்.

கல்விக்கொள்கை என்பது தமிழ்நாட்டில் பயிலும் மாணவர்களை கொண்டு உருவாக்கப்படுவது தான். கல்வி அளிப்பது சேவை தான். நம் கலாசாரத்தை ஒட்டிய புதிய கல்விக் கொள்கையைப்போல் தமிழ்நாடு அரசு உருவாக்கவுள்ளது. சேவை செய்வதற்காக வந்துள்ள தனியார் பள்ளிகள் இது போன்று அரசை மிரட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மாநில அரசு கொண்டுவரும் புதிய கல்விக்கொள்கையில் முரண்பாடு இருந்தால் வேறு மாநிலத்திற்கு சென்று தேசிய கல்விக் கொள்கையை ஏற்று சேவையாற்றலாம். தனியார் பள்ளிகளுக்கு என்று தனிச்சட்டங்கள் வைத்து செயல்படுகின்றனர். ஆல் பாஸ் என்ற திட்டம் இடைநிற்றலை குறைக்க செய்யப்பட்டது. இது ஒட்டு மொத்தமாக தொடர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'மொபைல் ஆப் பற்றி முழுமையாக தெரிந்து பயன்படுத்தவேண்டும்’ - கோவை காவல் ஆணையர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.