ETV Bharat / state

டாஸ்மாக் விற்பனை ரூ.708 கோடி... செந்தில் பாலாஜி எச்சரிக்கை... அண்ணாமலை கேள்வி... - tasmac collection controversy bjp annamalai

தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை ரூ.708 கோடியை எட்டியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்தார். அதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

டாஸ்மாக் விற்பனை ரூ.708 கோடி... செந்தில் பாலாஜி எச்சரிக்கை

author img

By

Published : Oct 25, 2022, 1:34 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 3 நாள்களில் ரூ.708 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று வெளியாகும் செய்திகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். அதோடு தீபாவளி முடிந்தவுடன் நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் வந்து சேராத சூழலில் ‘விற்பனை விவரம்’ என்று பொய்யான தகவலை மக்களிடம் சில ஊடகங்கள் கொண்டு சேர்க்கிறது என்று குற்றம்சாட்டினார். குறிப்பாக பொய்யான தகவலை வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம். இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா?.

பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிடுவதற்கு முன் அறிவாலயத்தின் அனுமதி பெற வேண்டுமா? அப்படியே உங்களுக்கு வழக்கு தொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் பத்திரிகையாளர்களை விட்டு விட்டு என் மீது வழக்குத் தொடுங்கள். சாராய அமைச்சரின் இந்த நடவடிக்கை தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் பெயரில் நடக்கிறதா அல்லது சாராய அமைச்சரே தன்னிச்சையாக செயல்படுகிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையொட்டி நேற்று சென்னையில் ரூ. 48.80 கோடிக்கும், திருச்சியில் ரூ. 47.78 கோடிக்கும்,சேலத்தில் ரூ. 49.21கோடிக்கும், மதுரையில் ரூ. 52.87 கோடிக்கும், கோவையில் ரூ. 45.42 கோடிக்கும் என்று மொத்தமாக ரூ. 708 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது என்று டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’தமிழ் எங்கள் மானம், இந்தித் திணிப்பு அவமானம்..!’ - வைரமுத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.