ETV Bharat / state

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: டெபாசிட் தொகை இரட்டிப்பாக உயர்வு - டெபாசிட் தொகை இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது

மாநகராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.4 ஆயிரம், நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.2 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.1,000 டெபாசிட் எனத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய காப்புத் தொகை (டெபாசிட்) இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: டெபாசிட் தொகை இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது...

author img

By

Published : Jan 23, 2022, 8:33 AM IST

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் ஜனவரி 20ஆம் தேதி தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பெருவாரியான கோரிக்கையாக தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமெனவும், கரோனா நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டுமெனவும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணைராணுவத்தினரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டுமெனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுதோறும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டத்திற்கும், பிற மாவட்டங்களுக்கும் நடைபெற்றது. தற்போது தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன.

இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வருகிற 27ஆம் தேதிக்குள் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என்ற நிலையில் வருகின்ற 24ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

இதனிடையே, தற்போது வேட்பாளர் கையேட்டை மாநிலத் தேர்தல் ஆணையம், மாவட்டங்களுக்கு அனுப்பி உள்ளது. இந்தமுறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய காப்புத் தொகை (டெபாசிட்) இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.

  • அதன்படி, மாநகராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.4 ஆயிரம், நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.2 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.1,000 காப்புத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் போட்டியிட்டால் மேற்கூறிய தொகையில் பாதி செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் பெயரிலோ, கட்சிகள் பெயரிலோ மற்றும் அது தொடர்பான வாசகங்கள் அச்சிடப்பட்ட எவ்விதமான விளம்பர சுவரொட்டிகளோ, டிஜிட்டல் பேனர்களோ, கட்- அவுட்களோ, சுவரில் எழுதப்பட்டோ மாநிலத்தின் எந்த இடத்திலும் இருக்கக்கூடாது.

இந்த முறை ஒலிபெருக்கி பயன்படுத்துவது தொடர்பாக கடும் கட்டுப்பாடுகளை மாநிலத் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவரது முகவர்கள் கைப்பேசி பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெபாசிட் தொகை

வைப்புத்தொகை (Deposit) என்பது ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிட கட்டவேண்டிய முன்பணம். அரசாட்சி முறையில் போதிய ஆர்வமற்றவர்களும், பொழுதுபோக்காக போட்டியிட நினைப்பவர்களையும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஓரளவு தடுக்கும் நோக்குடன் வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது.

ஒரு வேட்பாளர் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கை வாக்குகளைப் பெறத் தவறினால், அவரது வைப்புத் தொகை அவருக்குத் திருப்பி அளிக்கப்படாது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், பதிவான மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெறத் தவறியவர்கள், தங்கள் வைப்புத்தொகையை இழப்பர்.

ஒரு வேட்பாளர் இவ்வாறு வைப்புத் தொகை இழப்பது பெருந்தோல்வியின் அடையாளமாகவும் அவமானகரமானதாகவும் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: தேர்தல் பேரணிகளுக்கு ஜன.31 வரை தடை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.