ETV Bharat / state

TN Assembly : அக்டோர்பர் 9-இல் கூடுகிறது தமிழக சட்டப் பேரவை - சபாநாயகர் அப்பாவு!

அக்டோபர் 9ஆம் தேதி தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் கூடுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Appavu
Appavu
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 2:18 PM IST

Updated : Sep 20, 2023, 5:53 PM IST

சபாநாயகர் அப்பாவு பேட்டி

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு, வருகிற அக்டோபர் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது எனவும், அன்றைய தினம் 2023 - 2024ஆம் ஆண்டிற்கான செலிவனங்களுக்கான மானிய கோரிக்கையை நிதியமைச்சர் அறிமுகம் செய்வார் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அப்பாவு, “நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் தாக்கல் செய்த மகளிருக்கான இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்துவதில் எவ்வளவு சிக்கல் இருக்கும் என்பதையும், அதை சட்டமாக நிறைவேற்ற முடியுமா என்பதையும் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

அதிலும் தேர்தல் வரக்கூடிய இந்த நேரத்தில், தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கி அனைத்து மகளிரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளனர். அதையே நாமும் மகளிருக்கு இடஒதுக்கீடு என்று ஒரு மூலம் வாக்குகளை பெற்றுவிடாலம் என்பதற்காக மத்திய அரசு அறிவித்திருக்கலாம் என பலர் பேசி வருகின்றனர். நான் கூறவில்லை.

இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது என மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. ஏனெனில், மக்கள் கணக்கெடுப்பு இதுவரை எடுக்கவில்லை. இது போல பல பிரச்னைகள் உள்ளது. இந்த இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முடியும். அனைவரும் இதை ஏற்றுக் கொள்வார்கள் என்ற அடிப்படையிலேயே இதை அவர்கள் தாக்கல் செய்துள்ளனர்.

எதிர்கட்சித் துணைத் தலைவர் விவாகரம் தொடர்பாக ஏற்கனவே அவர்கள் தரப்பில் முடிவு செய்யபட்டுள்ளது. மேலும், சட்டபேரவை நிகழ்வுகள் எத்தனை நாட்கள் என அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தி முடிவு செய்யபடும். நாடாளுமன்றக் கூட்டு கூட்டத்தொடர் துவங்கும்போது குடியரசுத் தலைவர் முன்னிலையில் துவங்கியிருக்க வேண்டும்.

ஆனால், அப்படி நடைபெறவில்லை. மேலும், புதிய நாடாளுமன்ற வளாகம் திறப்பு விழாவிற்கும் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை, கூட்டத்தொடருக்கும் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதிலிருந்து மத்தியில் ஆளும் அரசு எந்த மனநிலையில் இதை செய்கிறார்கள் என்று உணரச் செய்கிறது.

சிம்லாவில் நடைபெற்ற சபாநாயகர் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தேன். சட்டமன்றத்திலோ அல்லது அமைச்சரவை கூட்டத்திலோ முடிவு எடுக்கப்பட்டு, ஆளுநருக்கு அனுப்புகின்ற மசோதாவில் குறிப்பிட்ட காலத்திற்குள் அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளோம். தமிழக ஆளுநருக்கும். எங்களுக்கும் எந்தவித பிரச்னையும் இல்லை.

சட்டமன்றத்திலோ அல்லது அமைச்சரவைக் கூட்டத்திலோ முடிவு எடுக்ப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதுதான் ஆளுநரின் பணி. ஆளுநரும் நாங்கள் அனுப்பி வைத்த மசோதாக்கள் மீது கருத்துக்களையும் அவர் கூறியுள்ளார். அதற்கு விமர்சனைங்களையும் அவர் பெற்றுள்ளார்.

எங்கு நடக்கிறதோ இல்லையோ தமிழகத்தில் நடைபெறுவது இந்திய அரசியலமைப்பின் சட்டத்தின்படியான அரசுதான். ஆளுநரும், தன் பொறுப்பை உணர்ந்து பொதுவெளியில் பேச வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மெட்ரோ ரயில்: சென்னையில் வேகம் எடுக்கும் சுரங்கம் தோண்டும் பணிகள்!

Last Updated : Sep 20, 2023, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.