ETV Bharat / state

நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத குழந்தைகளை ஆட்சியர்கள் கண்காணிக்க உத்தரவு! - State Director of Integrated School Education

இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து 100% மாணவர்கள் கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாநில இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத குழந்தைகளை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க உத்தரவு!

author img

By

Published : Jun 13, 2023, 3:04 PM IST

சென்னை: 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், நடப்பு கல்வி ஆண்டில் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பொதுத் தேர்வு எழுதாமல் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாநில இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், பள்ளிக்கு நீண்ட நாட்கள் வராத மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "2023-24 ஆம் கல்வி ஆண்டில் இடையில் நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து 100% மாணவர்கள் கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை 100% மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்துவதற்கு, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், கல்வியாளர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வியின் தன்னார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து பல்வேறு செயல்பாடுகளை ஆண்டு முழுவதும் செய்து வருகிறது.

பள்ளி செல்லாத மற்றும் இடை நின்ற குழந்தைகளுக்கான கணக்கெடுப்பின்போது அனைத்து தரவுகளும் மொபைல் ஆப் மூலம் பதிவு செய்யப்படுகிறது. அதனடிப்படையில் மாணவர்கள் இடையில் நின்ற காரணங்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இடம், பொருளாதார சூழல், குடும்ப சூழல் போன்ற பல காரணங்களால் பள்ளிக்கு செல்ல இயலாத குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும்.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் போன்றோரை பள்ளியில் மீண்டும் சேர்க்கத் தேவையில்லை. அதேபோல், ஐடிஐ பாலிடெக்னிக் போன்றவற்றில் சேர்ந்து இருக்கும் குழந்தைகள், வேறு மாநிலங்களுக்கு அல்லது நாடுகளுக்கு இடம் பெயர்ந்தவர்கள் போன்றவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அந்த விவரங்கள் உண்மை என்னும் பட்சத்தில் அவர்களை பள்ளியில் மீண்டும் சேர்க்கத் தேவையில்லாத மாணவர்கள் என்கிற பிரிவில் பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறு இல்லை என்றால் அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டிய மாணவர்கள் என்கிற பிரிவில் பதிவு செய்ய வேண்டும். மேலும், ஐடிஐ பாலிடெக்னிக் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் விபரங்களை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துடனும் தொடர்பு கொண்டு அதனை உறுதி செய்ய வேண்டும். நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத குழந்தைகளை கண்டறிந்து அவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு வாரத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால், அந்த மாணவர்களின் விவரப்பட்டியல் தலைமை ஆசிரியரின் கல்வி மேலாண்மை இணையதளத்தில் காண்பிக்கப்படும். அதில் தலைமையாசிரியர், மாணவர் வராததற்கான காரணத்தை பதிவு செய்து தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இரண்டு வாரத்தில் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால், வட்டார வளர்ச்சி மைய ஆசிரியர் பயிற்றுநர் எமிஸ் தளத்தில், அந்த மாணவர்களின் விவரப்பட்டியல் காண்பிக்கப்படும். எனவே, ஆசிரியர்கள் மீண்டும் மாணவர்களை பள்ளியில் சேர்க்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒரு மாணவர் மூன்று வாரத்தில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், 30 நாட்களில் 15 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் மாநில அளவில் கண்காணிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் இந்த மாணவர்களின் விவரங்கள் பள்ளி மேலாண்மை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் மூலம் பள்ளியில் தொடர்ந்து படிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஒரு மாதத்திற்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களின் விபரங்களை தலைமை ஆசிரியர் கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பொது பட்டியலில் காண்பிக்க வேண்டும். மேலும் அந்த மாணவர் பள்ளிக்கு வராததற்கான காரணத்தையும் அதில் பதிவு செய்ய வேண்டும். ஆறு முதல் 18 வயதுடைய பள்ளிச் செல்லம் மற்றும் இடைநிலை நின்ற குழந்தைகள் மற்றும் இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் மூன்றடுக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரையும் 100% பள்ளியில் சேர்ப்பதற்கு தனி கவனம் செலுத்த வேண்டும். 5, 8, 10 ஆகிய வகுப்புகளில் பயின்ற மாணவர்கள் அனைவரும் அடுத்த வகுப்பில் சேர்க்கப்பட்டு விட்டது உறுதிப்படுத்துவதன் மூலம் இடைநிற்றலை தவிர்த்தல். 10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்விற்கு வருகை புரியாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து மாணவர்களுக்கும், துணைத் தேர்வு எழுதுவதற்கு உறுதி செய்தல் மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள மாணவர்களை கண்டறிந்து கண்காணிப்பதை தொடங்குதல் ஆகிய பணிகளை ஜூன் ஜூலை மாதங்களில் செய்ய வேண்டும்” என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அண்ணாமலை வருகைக்கு பிறகே தமிழகத்தில் பாஜக வளர்ச்சி: உமாரதி ஓப்பன் டாக்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.