சென்னை: லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வட தமிழ்நாட்டை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ.4) புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டின் மழை நிலவரம்
05.11.2021: டெல்டா மாவட்டங்கள், கடலூர், சேலம், ஈரோடு, நீலகிரி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
06.11.2021: டெல்டா மாவட்டங்கள், கடலூர், சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
07.11.2021: கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
08.11.2021: டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வானிலை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும், சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
அரபிக்கடல் பகுதிகளில் இன்று (நவ.4) முதல், நவம்பர் ஆறாம் தேதி வரை கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதனைத் தொடர்ந்து நவம்பர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் ஏழாம் தேதி வரை மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேலும் நவம்பர் எட்டாம் தேதி வரை தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் மேல் கூறிய இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: சாலைகளின் பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் - சென்னை மாநகராட்சி