ETV Bharat / state

குழந்தைகள், பெண்களை பிச்சை எடுக்க வைத்தால் குண்டாஸ் - காவல்துறை எச்சரிக்கை! - Kidnapping people to beg

தமிழ்நாட்டில் ஏழை பெண்கள் மற்றும் குழந்தைகளை பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குண்டர் சட்டம் பாயும் “ஆப்ரேஷன் மறுவாழ்வு”: இது என்ன திட்டம்

author img

By

Published : Dec 3, 2022, 10:55 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நகர்புற சாலை சந்திப்புகளிலும், புறவழி சாலை சுங்கச்சாவடிகளிலும் பெண்கள் மற்றும் சிறார்கள் பிச்சை எடுப்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இவர்களை ஒரு கும்பல் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தி லாபம் அடைகின்றனர். இதனை தடுத்து நிறுத்துவதற்காக "ஆப்ரேஷன் மறுவாழ்வு" என்ற பெயரில் அதிரடி நடவடிக்கை காவல்துறையால் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்கள் மற்றும் 9 காவல் ஆணையரகத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 726 பிச்சைகாரர்கள் மற்றும் 16 குழந்தைகள் மீட்கப்பட்டனர். பெண்களையும், குழந்தைகளையும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்திய நபர்களை பற்றி காவல்துறை விசாரித்து வருகிறது.

மீட்கப்பட்ட பிச்சைகாரர்கள் மறுவாழ்வு இல்லத்திற்கும், குழந்தைகளை காப்பகத்திற்கும் அனுப்பப்பட்டனர். அதில் 150 நபர்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இனி ஏழை பெண்கள், குழந்தைகளை பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற பெரும் நகரங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளை வெகு தூரங்களில் இருந்து அழைத்து வரப்பட்டு பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தும் ஆட்கடத்தல் குற்றவாளிகள் பற்றி தகவல் தெரிந்தால் 044- 28447701 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் குற்றவாளிகள் குறித்த நல்ல தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ராணுவ உடையில் கஞ்சா கடத்தல்.. கேரளா குருவி சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.