ETV Bharat / state

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் ஹேக்கத்தான் - காவல் துறை அதிரடி!

author img

By

Published : Nov 24, 2019, 4:06 AM IST

சென்னை: காவல் துறையும், ஐ.ஐ.டி.யும் இணைந்து சைபர் கிரைம் தடுப்பு மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக ஹேக்கத்தான் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது.

ஹேக்கத்தான்

சென்னையில் சைபர் கிரைம் தடுப்பு மற்றும் குற்றங்களை குறைப்பதற்கான ஹேக்கத்தான் போட்டி காவல் துறை, ஐ.ஐ.டியுடன் இணைந்து காவல்துறைத் தலைமை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட 148 பேர் பங்கேற்றனர்.

இவர்களுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டு பின்னர் போட்டி நடத்தப்பட்டது. இதில், சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு ஊக்கபரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதன்பின், காவல்துறைத் தலைமை இயக்குநர் திரிப்பாதி கூறுகையில், தமிழ்நாடு அரசு சைபர் தடவவியல் மற்றும் சைபர் பாதுகாப்புக்காக 3கோடியே 70 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

சைபர் குற்றங்களை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசும், காவல்துறையும் முன்னெடுத்து வருவதாகவும், தமிழ்நாடு காவல்துறையினர், ஐ.ஐ.டி, தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் இணைந்து சைபர் அரங்கம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. அதன்மூலம் தொழிற்நுட்ப வல்லுநர்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டோர் தங்களது பங்களிப்பை அளிக்க உள்ளனர். சைபர் குற்றங்களை தடுப்பதற்காக மாவட்டத்திற்கு ஒரு சைபர் குற்ற காவல் நிலையம் அமைக்கப்படும் என அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏடிஜிபி கந்தசாமி பேசுகையில், சைபர் குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து சைபர் குற்றங்களை தடுக்க சைபர் அரங்கம் செயல்படுவதாகவும், சைபர் குற்றங்களை காவல் துறையால் மட்டும் தடுக்க முடியாது, ஐடி வல்லுநர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

ஏடிஜிபி கந்தசாமி ஹேக்கத்தான் குறித்து

இதனால் தான் தமிழ்நாடு அரசு சைபர் அரங்கத்தை அமைத்து அதன்மூலம் ஹேக்கத்தான் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளதாகவும், முதற்கட்டமாக சென்னையில் தொடங்கி உள்ளது.

அடுத்தகட்டமாக மதுரை, கோவை, திருச்சி போன்ற பெரிய நகரங்களில் கூடிய விரைவில் தொடங்கப்படும் என்றும் ஹேக்கத்தான் மூலம் மக்கள் எப்படி தொழிற்நுட்பங்களை கையாள வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமைப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட ஹேக்கர்கள் முயற்சியா?... மைக்ரோசாப்ட் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

Intro:Body:சைபர் குற்றங்களை தடுப்பதற்காக அனைத்து மாவட்டத்திலும் தனியாக சைபர் குற்ற காவல் நிலையம் அமைக்கப்படும் என காவல் துறை இயக்குனர் திரிப்பாதி தெரிவித்தார்..

சென்னை டிஜிபி அலுவலகத்தில் நடைப்பெற்ற சைபர் கிரைம் தடுப்பு மற்றும் குற்றங்களை குறைப்பதற்கான ஹேக்கத்தான் போட்டி ஐ.ஐ.டி துணையுடன் நடத்தப்பட்டது.இதில் கல்லூரி மாணவர்கள்,பேராசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளிட்ட 148 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டு பின்னர் போட்டி நடத்தப்பட்டது.இதில் சிறப்பான வகையில் செயல்பட்ட மாணவர்களுக்கு ஊக்கபரிசுகள் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டனர்..பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய திரிப்பாதி தமிழகம் முழுவதும் சைபர் தடவவியல் மற்றும் சைபர் பாதுகாப்புக்காக 3கோடியே 70 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது என்றும், சைபர் குற்றங்களை தடுப்பதற்காக தமிழக அரசும் காவல்துறையும் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.மேலும் தமிழக காவல்துறையினர் மற்றும் ஐ ஐ டி, தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் இணைந்து சைபர் அரங்கம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. அதன் மூலம் தொழிற்நுட்ப வல்லுனர்கள்,கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டோர் தங்களது பங்களிப்பை அளிக்க உள்ளதாக கூறினார்.சைபர் குற்றங்களை தடுப்பதற்காக மாவட்டத்திற்கு ஒரு சைபர் குற்ற காவல் நிலையம் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்..

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏடிஜிபி கந்தசாமி சைபர் குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து சைபர் குற்றங்களை தடுக்க சைபர் அரங்கம் செயல்படுவதாகவும்,சைபர் குற்றங்களை போலிசாரால் மட்டும் தடுக்க முடியாது எனவும் ஐடி வல்லுனர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.இதனால் தான் தமிழக அரசு சைபர் அரங்கத்தை அமைத்து அதன் மூலம் ஹேக்கத்தான் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.ஹேக்கத்தான் முதன்மையாக சென்னையில் தொடங்கி உள்ளதாகவும்,மேலும் மதுரை போன்ற பெரிய நகரங்களில் கூடிய விரைவில் நடைபெறும் எனவும் தெரிவித்தார். ஹேக்கத்தான் மூலம் மக்கள் எப்படி தொழிற்நுட்பங்களை கையாள வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமைப்பாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.