ETV Bharat / state

முதலமைச்சரின் பொய்களை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் - ஸ்டாலின்

சென்னை: அப்பாவி மக்கள் 13 பேரைச் சுட்டுக் கொன்ற பழியிலிருந்து தப்பிக்க, ஸ்டெர்லைட் ஆலை தொடங்க நான்தான் காரணம் என்று கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பச்சைப் பொய் கண்டனத்திற்குரியது என்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் பொய்களை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்- மு.க.ஸ்டாலின்!

author img

By

Published : Nov 11, 2020, 8:05 PM IST

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்த முதலமைச்சரின் உளறலை, நெஞ்சறிந்தே சொல்லும் நீளமான பொய்யை, தமிழ்நாடு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும், எத்தனை பெரிய இடத்தில் எத்தனை பெரிய எத்தர் என்று தான் நினைப்பார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் ஜனநாயக ரீதியில் அறப்போராட்டம் நடத்திய அப்பாவிப் பொதுமக்களை எந்தவிதக் காரணமுமின்றிச் சுட்டுவீழ்த்தி, 13 பேர் படுகொலைக்கு முழுக் காரணமாக இருந்து விட்டு, இந்தச் சம்பவம் நடப்பதற்கு நான் தான் நூறு விழுக்காடு காரணம் என்று என் மீது “பச்சைப் பொய்” கூறி, குற்றம் சாட்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவல்துறை வேன்களில் நின்று பொதுமக்களை நோக்கிச் சுட்டுக் கொண்டிருந்த அராஜகக் காட்சியை நாடே தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்ததை மறந்துவிட்டு, அந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க அமைத்த ஆணையத்தையும் முடக்கி வைத்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ‘உலக மகா’ பொய் சொல்வதைக் கேட்டு அப்பகுதி மக்கள் வெட்கி முகம் சுழிக்கிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் வருவதற்கு முழு முதற்காரணம் அதிமுக தான். ஸ்டெர்லைட் ஆலை அமைக்கத் தடையின்மை சான்றிதழை 1.8.1994 அன்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தான் கொடுத்து. இந்த ஆலையை திறந்து வைத்தபோது, “தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சிப் பாதையில் மேலும் ஒரு புதிய மைல்கல்” என்று ஜெயலலிதா பேசினார்.

2013 ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட மூன்று பேர் கமிட்டியில் இருந்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலாளர், “ஆலை பாதுகாப்பாக இருக்கிறது. விதிமுறை மீறல் இல்லை” என்று அறிக்கை தாக்கல் செய்ததும் அதிமுக ஆட்சியில்தான்! அதனடிப்படையில்தான் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டது.

துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரைக் கொன்றதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில்தான். ஸ்டெர்லைட் பற்றிய அடிப்படை உண்மைகூடத் தெரியாமல் திரித்துப் பேசலாம், மக்களைத் திசைதிருப்பலாம் என்றெல்லாம் பழனிசாமி பகல் பொழுதிலேயே கனவு கண்டால், அதற்கு யாரும் பொறுப்பாக முடியாது.

முதலமைச்சரின் உளறலை, நெஞ்சறிந்தே சொல்லும் நீளமான பொய்யை, தமிழ்நாடு மக்கள் ஏற்க மாட்டார்கள்; எத்தனை பெரிய இடத்தில் எத்தனை பெரிய எத்தர் என்றுதான் நினைத்துக் கொள்வார்கள்.

“நீர் மேலாண்மைக்கு திமுக என்ன செய்தது” என்று இன்னொரு கேள்வியைக் கேட்டிருக்கிறார் பழனிசாமி. 1967 முதல் 1976 வரையில் 20 அணைகள், 1989 முதல் 2011 வரை 22 அணைகள் என 42 அணைகள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டன. அதிமுக ஆட்சியில் கட்டிய ஒரு அணையின் பெயரைச் சொல்ல முடியுமா?

தூத்துக்குடி மக்களின் மீது முதலமைச்சருக்கு கோபம் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சுட்டதற்காக அமைக்கப்பட்ட கமிஷன் விசாரணையை முடக்கிப் போட்டிருக்கலாம். ஆனால் தங்களது உயிர்களைக் கப்பாற்றிக் கொள்ள- தங்களது சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாத்துக் கொள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்திட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கெட்டிக்காரர் புளுகு எட்டு நாளைக்கு” என்பார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் புளுகு எட்டு நொடிக்குக் கூடத் தாங்காது. ஆளுவோருக்கு முக்கியமாக வேண்டியது நாவடக்கம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.