சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஜூலை.08) புதிதாக ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 575 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 210 நபர்களுக்கும், மேற்கு வங்காளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என மொத்தம் 3 ஆயிரத்து 211 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 32 லட்சத்து 43 ஆயிரத்து 351 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 25 லட்சத்து 10 ஆயிரத்து 59 நபர்கள் தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
இவர்களில், தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 33 ஆயிரத்து 665 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில், மேலும் குணமடைந்த 3 ஆயிரத்து 565 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 43 ஆயிரத்து 141 என உயர்ந்துள்ளது.
மேலும் தனியார் மருத்துவமனையில் 13 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 44 நோயாளிகளும் என 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 253 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை : 5,34,310
கோயம்புத்தூர் : 2,23,861
செங்கல்பட்டு : 1,58,570
திருவள்ளூர் : 1,11,803
சேலம் : 90,306
திருப்பூர் : 84,703
ஈரோடு : 91,108
மதுரை : 72,852
காஞ்சிபுரம் : 70,732
திருச்சி : 70,575
தஞ்சாவூர் : 65,121
கன்னியாகுமரி : 59,427
கடலூர் : 58,669
தூத்துக்குடி : 54,526
திருநெல்வேலி : 47,364
திருவண்ணாமலை : 50,440
வேலூர் : 47,279
விருதுநகர் : 44,974
தேனி : 42,548
விழுப்புரம் : 42,951
நாமக்கல் : 45,658
ராணிப்பேட்டை : 41,337
கிருஷ்ணகிரி : 40,546
திருவாரூர் :37,178
திண்டுக்கல் : 31,821
புதுக்கோட்டை : 27,434
திருப்பத்தூர் : 27,732
தென்காசி : 26,559
நீலகிரி : 29,112
கள்ளக்குறிச்சி : 27,799
தருமபுரி :25,199
கரூர் : 22,291
மயிலாடுதுறை : 20,399
ராமநாதபுரம் :19, 777
நாகப்பட்டினம் : 18,015
சிவகங்கை : 18,104
அரியலூர் : 15,247
பெரம்பலூர் : 11,223