Tamil Nadu Latest News: தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி பல்வேறு தரப்பாலும் வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ''வெக்கை'' நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தத் திரைப்படம் சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் வகையில் அமைந்துள்ளதாக படத்தை பார்த்த பின், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படக்குழுவை பாராட்டி ட்வீட் செய்ததோடு, தொலைபேசியில் தொடர்பு கொண்டும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதனை மேற்கோள்காட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், அசுரன் படத்தைப் பார்த்துவிட்டு 'ஆஹா, அற்புதம் என கருத்து தெரிவிக்கும் ஸ்டாலின், முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது ஸ்டாலின் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ' மருத்துவர் ராமதாஸ் , தற்போது 'முரசொலி' இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார். அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை. நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?' இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
-
மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.!
— M.K.Stalin (@mkstalin) October 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட
பட்டா- மனை! pic.twitter.com/6x3S6P6qkL
">மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.!
— M.K.Stalin (@mkstalin) October 18, 2019
அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட
பட்டா- மனை! pic.twitter.com/6x3S6P6qkLமருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.!
— M.K.Stalin (@mkstalin) October 18, 2019
அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட
பட்டா- மனை! pic.twitter.com/6x3S6P6qkL
-
நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்!
— M.K.Stalin (@mkstalin) October 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?
">நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்!
— M.K.Stalin (@mkstalin) October 18, 2019
அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்!
— M.K.Stalin (@mkstalin) October 18, 2019
அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?
பாமகவும்-திமுகவும் எதிர் எதிர் அணிகளில் நின்று அரசியல் களமாடிவரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸின் கூற்றுக்குச் சரியான நேரத்தில் ஸ்டாலின் பதிலடி கொடுத்திருக்கிறார்.
'பஞ்சமி நிலங்களை ஸ்டாலின் உரியவர்களிடம் ஒப்படைப்பார்' - ஸ்டாலினை சீண்டும் ராமதாஸ்