ETV Bharat / state

காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்க வேண்டும்: தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம் வேண்டுகோள்

author img

By

Published : May 13, 2021, 10:45 PM IST

சென்னை: கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்க மாவட்ட நீதிமன்றங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம், உயர் நீதிமன்றத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்க வேண்டும்

இது தொடர்பாக தமிழ்நாடு நீதிபதிகள் சங்கத்தின் தலைவர் நீதிபதி பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 100 நீதித்துறை அலுவலர்கள், 300 ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு தொற்று பாதிப்பு உள்ளது.

கரோனாவுக்கு நீதித்துறை ஊழியர்கள் பலியாகியுள்ள நிலையில், மாவட்ட நீதிபதிகள், தங்கள் வீடுகளில் இருந்து காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்க அனுமதிக்க வேண்டும்.

'காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்க அனுமதி தாருங்கள்'

விசாரணைக் கைதிகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பை காணொலிக் காட்சி மூலம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். புது வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை நீதிமன்றக் காவலில் வைக்கும் உத்தரவுகளைப் பிறப்பிக்கும் பணியை நீதிபதிகளுக்கு சுழற்சி முறையில் ஒதுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கலைஞர் 8 அடி பாய்ந்தால் மு.க. ஸ்டாலின் 16 அடி பாய்வார்: பால் வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.