ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்! - எச் 3 என் 2 வைரஸ்

நாடெங்கும் பரவும் 'எச்.3 என் - 2' வைரஸ் பாதிப்பை தடுக்கும் விதமாக, தமிழ்நாட்டில் 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம் வருகிற மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 5, 2023, 12:09 PM IST

சென்னை: நாடு முழுவதும் பரவிக்கொண்டு இருக்கும் 'எச்.3 என் - 2' வைரஸ் பாதிப்பால் பலருக்கும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி உள்ளிட்டவைகள் இந்த வைரஸால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகும். ஏற்கனவே, வந்த கரோனாவின் கோரப் பிடியிலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மீண்டு வருவதற்குள்ளாகவே அடுத்த வைரஸ் பரவல் தாக்கத்தினால், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

இதனிடையே, இந்த வைரஸின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டில் சில பகுதிகளில் சிலர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்லத் தொடங்கி உள்ளனர். இதனால், மருத்துவமனைகளில் பொது மக்களின் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு, இந்த காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதல் படி, தமிழ்நாடு முழுவதும் வருகிற மார்ச் 10ஆம் தேதி, 1,000 இடங்களில் 'காய்ச்சல் முகாம்கள்' நடைபெறும் என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (மார்ச்.5) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னையில் 200 இடங்களிலும், காய்ச்சல் தொற்று அதிகம் கண்டறியப்படும் இடங்களிலும் நடமாடும் மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த காய்ச்சல் முகாம், காலை 9 மணிக்கு தொடங்கி தேவைக்கேற்ப நடைபெறும் இந்த முகாம்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு ஆய்வக நுட்பனர் மற்றும் ஒரு உதவியாளர் உள்ளிட்டோர் இதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குளிர்காலம் மற்றும் பருவ மழை காலம் நிறைவடையும் போது ஏற்படும் காய்ச்சல் இது. இதன் அறிகுறிகள் உடல் வலி ,தொண்டை வலி, இருமல் சளியுடன் கூடிய காய்ச்சல், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் தவறாமல் இந்த முகாமை அணுகி தங்களின் உடல் நிலையை பரிசோதித்து தேவைக்கேற்ற சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த முகாம்களில் தேவையான மருந்து மாத்திரைகள் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மக்கள் நோய் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, முகக் கவசம் அணிவது, அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை அம்சங்கள் மேற்கொள்ள வேண்டும்.

எனவே, வருகிற மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் காய்ச்சல் முகாமில் தங்களை பரிசோதித்துக் கொண்டு தேவை இருப்பின் சிகிச்சை பெற்று நலமுடன் வாழ கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் அந்த செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பிஎப் 7 வைரஸ் தாக்குதலை எதிர் கொள்ளத் தயார் - சென்னை மருத்துவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.