ETV Bharat / state

"தமிழகத்தில் தான் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்" - அமைச்சர் மா.சு! - வடமாநில தொழிலாளர்கள் மா சுப்பிரமணியன்

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மட்டுமே வெளிமாநில தொழிலாளர்கள் மிக மிக பாதுகாப்பாக இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அமைச்சர் மா.சு
அமைச்சர் மா.சு.
author img

By

Published : Mar 4, 2023, 2:18 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் வட இந்தியாவைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்றதால் ஏற்பட்ட பொறாமை காரணமாக தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடப்பதாக சிலர் வதந்திகளை பரப்புவதாகவும் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அவர்கள் மிக மிக பாதுகாப்புடன் இருப்பதாகவும் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை, நந்தனம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் 3 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான குளிர்சாதன வசதியுடன் கூடிய 900 இருக்கைகளுடன் அமைய உள்ள கலையரங்கத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "நந்தனம் கல்லூரி மாணவர்களுக்காக 3.70 கோடி ரூபாய் மதிப்பில் கலையரங்கம் கட்டப்பட உள்ளது. 2 கோடி ரூபாய் நிதி சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டு உள்ளது.

கலையரங்கத்தில் குளிர்சாதனம் உள்ளிட்ட கூடுதல் வசதிகளுக்காக மேலும் நிதி ஒதுக்கப்பட்டு 3 கோடியே 70 லட்ச ரூபாயாக இறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் ஆயிரம் மாணவர்கள் கலையரங்கத்தில் அமர முடியும் வகையில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புள்ளியியல், பொது நிர்வாகம், வணிகவியல் நிதி மேலாண்மை ஆகிய 3 பாடப்பிரிவுகளும் திமுக ஆட்சி அமைந்த பிறகு இந்த கல்லூரியில் தொடங்கப்பட்டது. 1980 களில் கருணாநிதி இங்கு மாணவர்களிடையே பேசியுள்ளார். வகுப்பறையில் நின்று கருணாநிதி பேசினார். கலையரங்கம் கட்டப்படுவதால் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்க முடியும்.

புறநகர் பகுதி மாணவர்கள் ஏராளமானோர் இங்கு பயின்று வருகின்றனர். பொருளாதார , சமூக அடிப்படையில் பின்தங்கிய மாணவர்கள் இங்கு கல்வி பயில்கின்றனர். நந்தனம் கல்லூரி சென்னையின் சிறப்புமிக்க அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்நு சைதாப்பேட்டைக்கு பெருமை சேர்த்தவர் கருணாநிதி.

எனவே கலையரங்கத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட வேண்டும் என்று இக்கல்லூரி முதல்வர் கருத்து தெரிவித்தார். அதை முதலமைச்சரிடம் எடுத்துக் கூறி கருணாநிதி பெயரில் கலையரங்கம் வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளில் தடை செய்யப்படும் மருந்துகளும், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகளும் தமிழகத்திலும் தடை செய்யப்படும்.

வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதிக்கப்படுவதாக கற்பனையான செய்திகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. கரோனா காலகட்டத்தில் கூட எதிர்கட்சித் தலைவராக இருந்த போது வெளி மாநில தொழிலாளர்களுக்கு 'ஒன்றிணைவோம் வா' திட்டம் மூலம் பல உதவிகளை செய்தவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

மேலும் முதலமைச்சராக வந்த பிறகு அவர்களது பயணச் செலவை ஏற்று, பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார்.
தமிழகத்தில் மட்டுமே வெளிமாநில தொழிலாளர்கள் மிக மிக பாதுகாப்பாக இருக்கின்றனர். முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவில் வட இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்றதால் பொறாமையில் சிலர் வீண் வதந்தியை கட்டவிழ்த்து விடுகின்றனர்.

கரோனா விதிகளை தொடர்ந்து கடைபிடித்தால் வைரஸ் காய்ச்சல் பாதிப்பையும் தடுக்க முடியும். வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். தற்போது அந்தளவிற்கு பாதிப்புகள் இல்லை" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அய்யா வைகுண்டரின் 191 வது அவதார தினம் - பேரணியாக சென்று உற்சாக கொண்டாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.