ETV Bharat / state

உள்நோயாளிகளுக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயமில்லை - சுகாதாரத்துறை அறிவிப்பு! - corona test

அறிகுறி தென்படாவிட்டால் பொது மக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
author img

By

Published : Nov 27, 2022, 2:51 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக பதிவாகி உள்ளது. மேலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 293 என குறைந்துள்ளது.

அரியலூர், சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக செல்பவர்களுக்கான கொரோனா பரிசோதனையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்த போதும், தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றிக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், சுகாதாரத்துறை இணை மற்றும் துணை இயக்குனர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, ”மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு கொரோனா அறிகுறிகளான இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சுவை இல்லாமை, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை இருந்தால் அவருக்கு பரிசோதனை செய்ய வேண்டும்.

மருத்துவமனைகளில் தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை. ஆரம்பக் கட்ட அறிகுறிகள் தென்பட்டாலும் அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சை இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், மகப்பேறுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படும் கர்ப்பிணிகள் போன்றவர்களுக்கு அறிகுறிகள் அதிகரித்தால் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கொரோனா பரிசோதனை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், பொது மக்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என்றும் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் தென்பட்டால் வீட்டில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளின் படி தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொது மக்கள் தேவையில்லாமல் கொரோனா பரிசோதனை மருது்தவமனைகளிலும், பரிசோதனை நிலையங்களிலும் செய்யப்படுவதை தடுக்க வேண்டும்” என அறிவிப்பில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை - வானிலை மையம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.