ETV Bharat / state

தமிழக பள்ளிகளில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகள்.. புதிய தேர்வு அட்டவணை வெளியீடு..!

Tamil Nadu Half yearly Time Table: தமிழகம் முழுவதும் நாளை (டிச.11) நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வானது ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்விற்கான புதிய தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Tamil Nadu Half Yearly Time Table
தமிழ்நாடு அரையாண்டு கால அட்டவணை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 5:14 PM IST

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாகத் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு நடைபெறுவதற்கான புதிய கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில், அரையாண்டுத் தேர்வுகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

'மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட பெருமழையின் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் பள்ளிகளுக்கு டிசம்பர் 4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, புயல் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களைச் சுத்தம் செய்து, வரும் 11.12.2023 (நாளை) பள்ளி திறக்கும் நாளில் மாணவர்கள் நல்ல படிக்கும் சூழலை உருவாக்கும் விதமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளைப் பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த 17 அதிகாரிகள், 4 மாவட்டங்களிலும் கண்காணித்து வருகின்றனர். இந்த மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தங்களது பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தகப்பை போன்ற பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் ஏற்கெனவே, நாளை (டிச.11) அரையாண்டுத் தேர்வானது தொடங்கி நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்குப் படித்து தயாராக முடியாது என்ற நிலையினைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் நாளை (திங்கள்கிழமை 11ஆம் தேதி) தொடங்க வேண்டிய தேர்வுகளை 13ஆம் தேதிக்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், பள்ளிக்கல்வித்துறை 1 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு, இரண்டாம் பருவத் தேர்விற்கான கால அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத் தேர்வு வரும் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து, 6 முதல் 10ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் 6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் காலை 10 முதல் 12 மணி வரையிலும், 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் காலை 10 முதல் 12.30 மணி வரையிலும், 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரையிலும் தேர்வு நடைபெறுகிறது.

1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை:

வ.எண் தேதி பாடம்
1 டிச.13 மாெழித்தாள் (தமிழ்)
2 டிச.14 விருப்ப மாெழிப்பாடம்
3 டிச.15 ஆங்கிலம்
4 டிச.18 கணக்கு
5 டிச.20 அறிவியல்
6 டிச.21 உடற்கல்வியியல்
7 டிச.22 சமூக அறிவியல்

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 1.15 மணி முதல் 4.30 மணி வரையில் தேர்வு நடைபெறும். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் காலை 9.30 மணி முதல் மதியம் 12.45 மணி வரையில் தேர்வு நடைபெறும்.

11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை:

வ.எண் தேதி பாடம்
1 டிச.13 மொழித்தாள்
2 டிச.14 ஆங்கிலம்
3 டிச.15

தொடர்பு ஆங்கிலம்

இந்திய கலச்சாரம் மற்றும் கொள்கை

கம்ப்யூட்டர் அறிவியல்

கம்ப்யூட்டர் பயன்பாடுகள்

உயிர் வேதியியல்

சிறப்புத் தமிழ்

மனை அறிவியியல்

புள்ளியியல்

நர்சிங் தொழிற்கல்வி

அடிப்படை பாெறியியல்

4 டிச.18

கணக்கு

விலங்கியல்

வணிகவியல்

நூண்ணுயிரியல்

உணவு மற்றும் ஊட்டசத்துவியல்

கைத்தறி மற்றும் ஆடை வடிவமைப்பு

உணவு சேவை மற்றும் மேலாண்மை

விவசாயம் மற்றும் அறிவியல்

நர்சிங்

5 டிச.20

இயற்பியல்

பொருளியியல்

திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு

6 டிச.21

வேதியியல்

கணக்குப் பதிவியல்

புவியியல்

7 டிச.22

தாவரவியல்

உயிரியியல்

வரலாறு

வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்

அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

அடிப்படை சிவில் இன்ஜினியரிங்

அடிப்படை ஆட்டோ மாெபைல் இன்ஜினியரிங்

அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

அலுவலக மேலாண்மை மற்றும் செயல்முறைமைகள்

துணிநூல் தொழில்நுட்பம்

இதையும் படிங்க: பட்ஜெட் முக்கியமல்ல நல்ல கதை தான் மக்களிடம் வரவேற்பை பெறுகிறது: நடிகர் ஹரிஷ் கல்யாண் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.