ETV Bharat / state

தமிழ்நாட்டில் 6.28 கோடியாக அதிகரித்த வாக்காளர்கள் - தமிழ்நாட்டில் 6. 28 கோடி வாக்காளர்கள்

தமிழ்நாட்டில், ஆறு கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu had 6. 28 voters said Election Commission

author img

By

Published : Mar 24, 2021, 6:16 PM IST

Updated : Mar 24, 2021, 6:51 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 பேர் இருந்தனர்.

அதன் பின்னர் தகுதி உடைய வாக்காளர்களை சேர்ப்பதற்கான முகாம் நடைபெற்றது. அதன்படி, ஜனவரி 20ஆம் தேதி முதல் மார்ச் 19ஆம் தேதி வரை 2 லட்சத்து 85 ஆயிரத்து 391 பேர் வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ளனர்.

தற்போது தமிழ்நாடு முழுவதும், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஆண்கள் - 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேரும் பெண்கள் 3 கோடியே 19 லட்சத்து 39ஆயிரத்து 112 பேர் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 7,192 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 10 லட்சம் பேர் அதிகமாக உள்ளனர்.

Tamil Nadu had 6. 28 voters said Election Commission
வாக்காளர்கள் விவரம்

அதிக அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. இங்கு 6 லட்சத்து 98 ஆயிரத்து 820 பேர் வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல், குறைந்தபட்ச வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக துறைமுகம் உள்ளது. இங்கு 1 லட்சத்து 75 ஆயிரத்து 770 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

மாவட்ட வாரியாக அதிக வாக்காளர்கள் உடைய மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது. அங்கு 40 லட்சத்து 57 ஆயிரத்து 61 பேர் உள்ளனர். குறைந்த அளவாக அரியலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 30ஆயிரத்து 983 பேர் உள்ளனர்.

Last Updated : Mar 24, 2021, 6:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.