ETV Bharat / state

பல்கலைக் கழக விரிவுரையாளர் பணியிடங்களும் TRB மூலம் நிரப்பப்படும்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ளது போல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பணிகள் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பணிகள் நிரப்பப்படும் - தமிழ்நாடு அரசு

author img

By

Published : Jan 12, 2023, 5:38 PM IST

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டுமே பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ளது போல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிர்வாகக்குழுவையும் மாற்றி அமைத்தும், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைவராக கூடுதல் தலைமைச் செயலளார் அந்தஸ்திலும், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக ஒரு ஐஏஎஸ் அதிகாரியும், மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் , துணை இயக்குநர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பதவிகளில் 71 பணியிடங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு போதுமான அளவில் பணியாளர்கள் இல்லாமல் தவித்து வந்தது. இதனால் தேர்வுகளை விரைந்து நடத்துவதிலும், தகுதியானவர்களை தேர்வு செய்து அளிப்பதிலும் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது.

இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தரத்தை மேம்படுத்த வழிமுறைகளை வகுக்க அரசு குழு அமைத்தது. ஆசிரியர் உள்பட பணி நியமனங்களை விரைவுப்படுத்தவும், முறைகேடுகள் எதுவும் இன்றி தேர்வுகளை நடத்தவும், அந்த குழு 39 பரிந்துரைகளை அரசுக்கு தெரிவித்தது.

அதனை ஏற்றுக்கொண்டு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், ’தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தொழில்நுட்ப பிரிவு, கணக்கு பிரிவு, நிர்வாகப் பிரிவு, அறிவிப்பு பிரிவு, சட்டப்பிரிவு, தகவல் அறியும் உரிமைப் பிரிவு, குறைதீர்க்கும் பிரிவு மற்றும் தகவல் மையப் பிரிவு, ரகசியப்பிரிவு, தேர்வு நடத்துதல் பிரிவு, சான்றிதழ் சரிபார்ப்பு பிரிவு, நூலகப் பிரிவு ஆகிய 11 பிரிவுகள் திறமையானதாகவும், பயனுள்ளதாகவும் ஏற்படுத்தப்பட்டு மறு சீரமைக்கப்படுகின்றன.

இது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பதவி உருவாக்கப்பட்டு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட உள்ளார். இது தவிர, மாவட்ட வருவாய் அதிகாரி, துணை ஆட்சியர் , இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி கணக்கு அதிகாரி, மேற்பார்வையாளர் உள்பட 71 பதவியிடங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கொள்கை விஷயங்களை தீர்மானிக்க, ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைவராகவும், பள்ளிக்கல்வி இயக்குநர்கள் உறுப்பினராகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 4 முன்னாள் அதிகாரிகளும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடுநிலை, வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்வர்.

tamilnadu trb
பல்கலைக் கழக விரிவுரையாளர் பணியிடங்களும் TRB மூலம் நிரப்பப்படும்!

மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ரகசியம் மந்தணத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில், சிசிடிவி பொருத்தவும், கண்காணிப்பிற்குத் தேவையான உபகரணங்களை வாங்கவும் அனுமதிக்கப்படுகிறது.
பணிக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்வதை வேகப்படுத்தவும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள் பட்டியலை அனைத்துத் தேர்விற்கும் 1:1.25 என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் படி 4 பணியிடத்திற்கு 5 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.

அனைத்து அரசு கல்வி நிறுவனங்களின்(பள்ளிகள், கல்லூரிகள், பாலிடெக்னிக், பல்கலைக்கழகங்கள் உள்பட) பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமே நிரப்பப்படும். இவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் கம்ப்யூட்டர் மூலமே நடத்தப்படும்.

இதற்கு முன்பு பல்கலைக்கழகங்கள் பணியிடங்கள், அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூலம் நிரப்பப்பட்டு வந்த நிலையில், இப்போது புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள இருக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்ய தரமான வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கான பாடத்திட்டங்களை ஐ.ஐ.டி., புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களின் நிபுணர்களால் 3 முதல் 6 மாதத்திற்குள் வடிவமைக்கப்பட இருக்கிறது. இவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

தேர்வர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு குறைதீர்ப்பு மையம், இணையதளம் மூலம் குறைகளைத் தெரிவிக்கும் வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படுவதில்லை. ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தனியாக கட்டடம் கட்டுவதற்கு தேவையான இடத்தையும் தேர்வு செய்தும், அதற்கான திட்டமதிப்பீட்டையும் தயார் செய்து அனுப்ப வேண்டும்’ எனவும் அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:சேது சமுத்திர திட்டம் தேவை: சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.