ETV Bharat / state

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

author img

By

Published : Mar 2, 2022, 7:46 AM IST

Updated : Mar 2, 2022, 3:24 PM IST

சென்னை: குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் சட்டம், 2005, பிரிவு 17(1)ன்படி மாநிலத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்குத் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் பதவிக்கான நியமனம் செய்ய வேண்டி ஆணையத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பப்படிவங்கள் மற்றும் தேவையான தகுதி விவரங்கள் www.tn.gov.in/department/30 (Social Welfare and Women Empower Department) மற்றும் www.tncpcr.tn.gov.in (Tamil Nadu Commission for Protection of Child Rights) என்ற இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு அதற்கான அமைந்த படிவத்தில் புகைப்படத்துடன் (pass–port size) 31.3.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் செயலர், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், நெ.183/1, ஈ.வெ.ரா. பெரியார் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை-10. என்ற முகவரியில் கிடைக்குமாறு விண்ணப்பிக்கலாம்.

முறையாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது எனத் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உக்ரைனில் இந்தியர் பலி: மாணவரின் தந்தைக்கு ஆறுதல் கூறிய பிரதமர்

Last Updated : Mar 2, 2022, 3:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.