ETV Bharat / state

அண்ணாப் பல்கலை முறைகேடு: விசாரணை அலுவலருக்கு உதவிட 13 பேர் நியமனம்

சென்னை: அண்ணாப் பல்கலை முறைகேடு குறித்த விசாரணை அதிகாரி நீதியரசர் கலையரசனுக்கு உதவிட 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

officer
officer
author img

By

Published : Nov 22, 2020, 11:09 AM IST

சென்னை, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகள் புகார் குறித்த விசாரணை அலுவலர் நீதியரசர் கலையரசனுக்கு உதவுவதற்காக 13 அலுவலர்களை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. தேர்வு மறுமதிப்பீட்டிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக உயர்கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்வதற்காக விசாரணை அலுவலராக ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார் . அவருக்கு விசாரணையுின்போது உதவுவதற்காக 13 பேர் கொண்ட அலுவலர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. இந்தக் குழுவில் காவல்துறை அலுவலர், ஆடிட்டர், வழக்கறிஞர்கள், தட்டச்சர், அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை மேற்கொள்வதற்காக புதிய அலுவலகம் சென்னை பசுமை வழி சாலையில் அமைக்கப்பட இருக்கிறது. சூரப்பா மீது ஆதாரங்களுடன் யார் வேண்டுமானாலும் புகார்களை அளிக்கலாம் என ஏற்கனவே நீதியரசர் கலையரசன் தெரிவித்துள்ளார். இதனால் துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை மேலும் வேகமாக நடைபெறும் என தெரிகிறது.
இதையும் படிங்க:சூரப்பாவிற்கு ஆதரவாக இரண்டு மாணவர்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.