ETV Bharat / state

விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் எப்போதெல்லாம் இருக்கும் - புதிய அறிவிப்பு வெளியீடு - இலவச மின்சாரம்

டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்
author img

By

Published : Mar 6, 2023, 3:48 PM IST

சென்னை: விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் வழங்கப்படும் நேரம் குறித்த சுற்றறிக்கையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திமுக ஆட்சி அமைந்தவுடன் பல நாட்களாக இலவச மின்சாரத்திற்காகக் காத்திருந்த ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய பின்னர் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகின்றனர் என்பதைக் கண்டறிய மீட்டர் பொருத்தப்படும் என அறிவிப்பானது இலவச மின்சாரத்தை அரசு ரத்து செய்யப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால், "விவசாயிகள் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறார் என்று கண்டறிந்தால் தேவையில்லாத மின் இழப்பைத் தவிர்க்கலாம். அதற்காக மீட்டர் பொருத்தப்படுகிறது" என மின்சாரத்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மின்கட்டணம் உயர்த்திய போதும் விவசாயிகளுக்கான மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது என தெரிவித்தனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்குவதற்கான சுற்றறிக்கை அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு சார்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு (எஸ்.எஸ்) துணை மின் நிலையத்திலும் இரண்டு (குரூப் 1, குரூப் 2) பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு துணைமின் நிலையத்திலும் (எஸ்.எஸ்) குரூப் 1 குரூப் 2 இரண்டு பகுதிகளுக்கும் காலை நேரத்தில் 8.30 மணியிலிருந்து 2.30 மணி வரை 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். அதேபோல் இரவு நேரத்தில் குரூப் 1 பகுதிக்கு நள்ளிரவு 12 மணி முதல் காலை ஆறு மணி வரையிலும், குரூப் 2 பகுதிக்கு இரவு 11 மணியிலிருந்து காலை 5 மணி வரையிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

இதைப்போலவே டெல்டா அல்லாத மாவட்டங்களில் ஒவ்வொரு துணைமின் நிலையத்திலும் குரூப் 1 பகுதிக்கு காலை 9 மணியில் இருந்து 3 மணி வரையிலும், இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மேலும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் குரூப் 2 பகுதிக்கு காலை 9:30 மணியில் இருந்து ம‌திய‌ம் 3.30 மணி வரையிலும், இரவு நேரத்தில் 10 மணியிலிருந்து விடியற்காலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சேலம் பெரியார் பல்கலை. பேராசிரியருக்கு பிடிவாரண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.