ETV Bharat / state

74th republic day: தமிழ்நாடு அரசு விருது பெற்றவர்கள் விபரம் - விவசாயிகளுக்கான வேளாண்மை துறை சிறப்பு விருது

74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறந்த காவலர், காவல் நிலையம், விவசாயிகள், வீர தீர சாகசம் புரிந்த காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

விருதுகள் வழங்கிய தமிழக முதல்வர்
விருதுகள் வழங்கிய தமிழக முதல்வர்
author img

By

Published : Jan 26, 2023, 8:53 AM IST

சென்னை: நாட்டின் 74ஆவது குடியரசு தின விழா, சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே கொண்டாடப்பட்டது. விழாவில் தேசியக்கொடியேற்ற வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து காலை 8 மணி அளவில் தமிழக ஆளுநர் ஆர்.எம். ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்து, முப்படை, தமிழ்நாடு காவல்துறை, மாணவர்கள் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர், விழாவில் சிறந்த காவலர், காவல் நிலையம், விவசாயிகள், வீர தீர சாகசம் புரிந்த காவலர், பொதுமக்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில்,

காந்தியடிகள் காவலர் பதக்கம்

1, பிரியதர்ஷினி - காவல் ஆய்வாளர் மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமையகம் சென்னை மாவட்டம்

2, ஜெயமோகன் - காவல் ஆய்வாளர் பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தஞ்சாவூர் மாவட்டம்

3, சகாதேவன் - காவல் உதவி ஆய்வாளர் மத்திய நுண்ணறிவு பிரிவு சேலம் மண்டலம்

4, இனாயத் பாஷா - காவல் உதவி ஆய்வாளர் மத்திய அரசு நுண்ணறிவு பிரிவு விழுப்புரம் மண்டலம்

5, சிவனேசன் - தலைமை காவலர் அயல் பணி மத்திய நுண்ணறிவு பிரிவு- பாலூர் காவல் நிலையம் செங்கல்பட்டு மாவட்டம்

சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருது

1, முதல் பரிசு - திருப்பூர் வடக்கு காவல் நிலையம்

2, இரண்டாம் பரிசு - திருச்சி கோட்டை காவல் நிலையம்

3, மூன்றாம் பரிசு - திண்டுக்கல் வட்டக் காவல் நிலையம்

விவசாயிகளுக்கான வேளாண்மை துறை சிறப்பு விருது

வசந்தா - ஆலவயல் கிராமம் பொன்னமராவதி வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்

வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் 2023 (அரசு ஊழியர் பிரிவு)

1, சரவணன் - தலைமை காவலர் சென்னை

2, ஜெயக்குமார் - பொன்னரசு ஆண் செவிலியர் வேலூர்

வீர வீர செயலுக்கான அண்ணா பதக்கம்- 2023 (பொதுமக்கள் பிரிவு)

1, அந்தோணிசாமி - தூத்துக்குடி மாவட்டம்

2, ஸ்ரீ கிருஷ்ணன் - கன்னியாகுமரி மாவட்டம்

3, செல்வம் - தஞ்சாவூர் மாவட்டம்

கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் 2023

எம்.ஏ. இணையத்துல்லா- கோயம்புத்தூர் மாவட்டம்

ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. பின்னர், கலை நிகழ்ச்சிகளை முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.

இதையும் படிங்க: Republic Day: தமிழ்நாட்டு சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள் - ஆளுநர் ஆர்.ரவி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.