ETV Bharat / state

தமிழ்நாடு ஆளுநரும், முதலமைச்சரும் கோவைக்கு ஒரே விமானத்தில் நாளை (டிச.18) பயணம்..!

Chennai Airport: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் நாளை (டிச.18) கோவையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஒரே பயணிகள் விமானத்தில் சென்னையிலிருந்து கோவைக்குச் செல்கின்றனர்.

tamil-nadu-governor-and-chief-minister-will-travel-on-the-same-flight-in-chennai-to-coimbatore
தமிழ்நாடு ஆளுநரும், முதலமைச்சரும் கோவைக்கு ஒரே விமானத்தில் பயணம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 4:39 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (டிச.18) காலை 8:20 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையிலிருந்து புறப்பட்டு காலை 9:20 மணிக்கு, கோவை செல்கிறார். கோவையில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு, அதன்பின், கோவையிலிருந்து மாலை 3:20 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் புறப்பட்டு, டெல்லிக்கு மாலை 6:30 மணிக்குச் செல்கிறார்.

டெல்லியில் நாளை மறுநாள் (டிச.19) நடக்கும், இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன்பின்பு முதலமைச்சர் அன்று இரவு 8:50 மணிக்கு, டெல்லியிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் புறப்பட்டு, இரவு 11:30 மணிக்குச் சென்னை திரும்புகிறார்.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நாளை(டிச.18) காலை 8:20 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையிலிருந்து புறப்பட்டு காலை 9:20 மணிக்கு, கோவை செல்கிறார். கோவையில் ஆளுநர் தனது நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாலை 4:15 மணிக்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், கோவையிலிருந்து புறப்பட்டு மாலை 5:15 மணிக்குச் சென்னைக்கு வருகிறார்.

தமிழ்நாடு ஆளுநரும், முதலமைச்சரும் ஒரே விமானத்தில் நாளை பயணம் செய்ய இருப்பது விமான நிலையத்தில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருமே சென்னை விமான நிலையத்திற்கு ஒரே நேரத்தில் சென்னை பழைய விமான நிலையம் கேட் எண் 6 வழியாக, விமான நிலையத்திற்குள்ளே வந்து, ஒரே விமானத்தில் ஏறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இன்று(டிச.17) முதலே சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு! மத்திய பிரதேசத்தை தொடர்ந்து மற்ற மாநிலங்களில் தலைவர்கள் மாற்றமா? 2024 தேர்தல் ஆலோசனையா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.