ETV Bharat / state

மணிப்பூரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை - 5 மாணவர்கள் இன்று இரவு தமிழகம் வருகை! - மணிப்பூரிலிருந்து தமிழக மாணவர்கள் வருகை

மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக 5 மாணவர்கள் இன்று இரவு தமிழ்நாட்டுக்கு வருகின்றனர்.

stalin
மணிப்பூரில்
author img

By

Published : May 9, 2023, 2:26 PM IST

சென்னை: தமிழக அரசு சார்பில் இன்று(மே.9) வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் உட்பட ஏராளமானவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர். இதனால், தமிழ்நாடு முதலமைச்சர், 05.05.2023 அன்று பொது மற்றும் மறுவாழ்வுத்துறை அலுவலர்களை இதுகுறித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதற்கிணங்க, மணிப்பூர் மாநிலத்தில் மருத்துவம் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுடன் உடனடியாக தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

மணிப்பூர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து விவாதித்து, அவர்களுக்கு தேவையான தண்ணீர், உணவு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் தமிழ்நாடு அரசால், அம்மாநில அரசு மற்றும் மணிப்பூர் தமிழ்ச் சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. மருத்துவம் பயிலும் மாணவர்கள் அவர்தம் கல்லூரி விடுதிகளில் பாதுகாப்பான நிலையில் உள்ளதாகவும், கல்லூரி தேர்வுகளுக்கு தயாராகி வருவதாலும் தற்சமயம் தமிழ்நாட்டிற்கு திரும்பி வர விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்கள்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்கு திரும்பி வர விருப்பம் தெரிவித்துள்ள விருதுநகர் மாவட்டம்-1, தூத்துக்குடி மாவட்டம்-1, திருவள்ளூர் மாவட்டம்- 2 மற்றும் கடலூர் மாவட்டம்-1 என தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 மாணவர்களை, தமிழகத்திற்கு அழைத்து வர அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மூலமாக விமான பயணச் சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் இன்று (மே.9) இரவு சென்னை விமான நிலையம் வந்தடைவார்கள். அவர்கள் அங்கிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று சேர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துறையால் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் மோரே தமிழ் மக்களுடனும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்களது பாதுகாப்பிற்கும் தமிழ்நாடு அரசால் மணிப்பூர் அரசு மற்றும் தமிழ்ச் சங்க பிரதிநிதிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற +2 தேர்வில் முதலிடம் பிடித்த நந்தினி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.