சென்னை: விளையாட்டு வீரர்கள் இளமைக் காலத்தில் வெற்றிகளை குவிக்கின்றனர். அவர்களின் வலிமையும் ஆற்றலும் பொருந்திய காலம் நிறைவான பிறகு, சாதனைகளை அங்கீகரித்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
அவ்வாறு நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய தொகையான ரூ.3000, தற்போது ரூ.6000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.2,057 கோடி ஒதுக்கீடு