ETV Bharat / state

தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை அறிவிக்கக் கோரி தமிழக அரசுக்குக் கடிதம்..!

Diwali Holiday: தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அரசிற்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

Diwali Holiday
தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை அறிவிக்கக் கோரி தமிழக அரசுக்குக் கடிதம்..!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 4:42 PM IST

சென்னை: பொதுவாகவே அரசு ஊழியர்கள், ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் என அனைவரும் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது நீண்ட நாள் விடுமுறைகளைத் தான். தற்போதைய காலகட்டத்தில் தங்களது வேலைக்காகச் சொந்த ஊரை விட்டு சென்னை போன்ற வெளி ஊர்களுக்கு வந்து அங்கேயே தங்கி பணிபுரிபவர்கள் அதிகம் காணப்படுகின்றனர்.

இப்படியான சூழலில் உள்ள எல்லோருக்குமே வருடத்தில் ஒரு முறையாவது தங்களது சொந்த ஊருக்குச் சென்று வர வேண்டும் என்ற ஆசை அதிக அளவில் இருக்கும். குறிப்பாகப் பண்டிகைகளை தங்களது சொந்த ஊரில் கொண்டாடினால்தான், அந்த விழா முழுமை பெற்ற உணர்வே ஏற்படும்.

அந்த வகையில், தீபாவளி, பொங்கல், அரசு விடுமுறை தினங்கள் என்று விடுமுறை நாட்களில் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரப் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.

இத்தகைய சூழ்நிலையில் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையானது வருகின்ற நவம்பர் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நவம்பர் 13ஆம் தேதி திங்கள்கிழமை வழக்கம்போல் பள்ளி, அலுவலகங்கள் செயல்படும் சூழல் உள்ளது. இதன் காரணமாகப் பண்டிகை நாளன்று இரவே சொந்த ஊர்களில் இருந்து புறப்பட வேண்டிய சூழல் உள்ளது.

இந்த நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் குடும்பத்துடன் கூடுதலாக ஒரு நாள் செலவிடுவதற்காகத் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நவம்பர் 13ஆம் தேதி திங்கள்கிழமை அன்று பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அரசிற்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "இந்த ஆண்டு தீபாவளி திருநாள் எதிர்வரும் 12ஆம் தேதி (ஞாயிறு) அன்று வருகின்றது. தீபாவளி திருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்து தங்களது சொந்த ஊருக்குச் செல்வர்.

தீபாவளி நோன்பு 13ஆம் தேதி (திங்கள்) அன்று கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள், மாணவர்கள் சொந்த ஊர்களில் இருந்து உடனே புறப்பட இயலாது ஆகவே அனைவரும் குடும்பத்துடன் ஒரு நாள் கூடுதலாகச் செலவிடும் வகையில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நவம்பர் 13ஆம் தேதி (திங்கள்) அன்று தமிழ்நாடு அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பட்டாசு கடையா..? மிட்டாய் கடையா..? தீபாவளிக்கு புதிதாய் களமிறங்கி உள்ள பட்டாசு வடிவ மிட்டாய்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.