ETV Bharat / state

கரோனாவால் நாடு திரும்பிய தமிழர்களுக்கான சிறப்புத் திட்டம் அறிவிப்பு

author img

By

Published : Feb 11, 2021, 11:14 AM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வெளிநாடுகளிலிருந்து, நாடு திரும்பிய தமிழர்களின் நலனைக் கருத்தில்கொண்டு புதிய தொழில்முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

Tamil Nadu Government announces special scheme for Tamils ​​returning home abroad by Corona

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக சுமார் 3.5 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாடுவாழ் தமிழர்கள் தமிழ்நாட்டிற்குத் திரும்பியுள்ளனர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இவர்களின் திறன்களைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்க ஏதுவாக தமிழ்நாடு அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மாவட்ட தொழில் மையம் வாயிலாக புதிய தொழில்முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் சில சலுகைகளையும், தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ், வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்பி, புதிதாக தொழில் தொடங்குவோருக்கு தொழில் கடனுதவி அளிக்க அரசு முடிவுசெய்துள்ளது.

இதையடுத்து, வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்பி, புதிதாக தொழில் தொடங்க விரும்புவோர் இத்திட்டத்தின்கீழ் மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு கூறியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.