ஐடி எக்ஸ்பிரஸ், ஓஎம்ஆர் சாலை சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையும் சுங்கக்கட்டணத்தில் அரசு மாற்றம் செய்துவருகிறது.
அதன்படி, தற்போது உள்ள கட்டண விகிதங்களில் 10 விழுக்காடு அதிகரித்து அரசு புதிய கட்டண விகிதங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது அக்டோபர் 1ஆம் தேதி அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.
புதிய கட்டண விவரங்கள் கீழே:
வாகனங்கள் | ஓருமுறை பயணிக்க கட்டணம் | பழைய கட்டணம் | |
---|---|---|---|
ஆட்டோ | ரூ. 10 | ரூ. 9 | |
கார் | ரூ.30 | ரூ. 27 | |
இலகுரக வாகனம் | ரூ. 49 | ரூ. 45 | |
பேருந்து | ரூ. 78 | ரூ. 75 | |
சரக்கு வாகனம் | ரூ. 117 | ரூ. 107 | |
சரக்கு வாகனம் பல அச்சு | ரூ. 234 | ரூ. 213 |
இதையும் படிங்க: சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து விரைவில் போராட்டம்