சென்னை: கரோனா தொற்று காலத்தில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் தொடர் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்வதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ளது.
அதில், உலக சுகாதார அமைப்பு கரோனாவை பெருந்தொற்று என அறிவித்தது. அண்மை காலங்களில் உலகளவில் மட்டுமல்லாமல், இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகரித்தது. தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வந்த பிறகு சுகாதாரப்பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொது சுகாதாரத் துறையில் காய்ச்சல் முகாம், நோய் தடுப்பு பிரிவு பணியாளர்கள் என அனைவரும் கடுமையாக பணியாற்றி வருகின்றனர்.
இதுபோன்று பெருந்தொற்று காலத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு முக்கித்துவமும், உத்வேகமும் அளிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின் பேரில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் என அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. ஆங்கில முறை மருத்துவர்கள் மற்றும் இந்திய முறை (AYUSH) மருத்துவர்கள் | ரூ.30,000 |
2. முதுநிலை மருத்துவ மாணவர்கள் | ரூ.20,000 |
3. பயிற்சி மருத்துவர்கள் | ரூ.15,000 |
4. செவிலியர்கள் | ரூ.20,000 |
5. கிராம மற்றும் பகுதி சுகாதார செவிலியர், 108 அவசர ஊர்தி பணியாளர்கள், 104 அமரர் ஊர்தி பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் அவருக்கு இணையான பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவம் சாரா பணியாளர்கள் (Para Medical) | ரூ.15,000 |
இதையும் படிங்க: தடுப்பூசிக்கு வரிவிலக்கு அளிக்காமல் நிறைவடைந்த ஜிஎஸ்டி கூட்டம்!