சென்னை: கடந்த ஆண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கரையை கடந்த நிவர் மற்றும் புரெவி புயலால் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.
முன்னதாக தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் பாதிப்புகளுக்கு நிதி வழங்கப்பட்டது. அதில் தமிழ்நாட்டிற்கு 2020 ஆம் ஆண்டு நிவர் புயலின் பாதிப்புக்காக ரூ.63.14 கோடியும், 2020 புரெவி புயலின் பாதிப்புக்காக ரூ.223.77 கோடியுமாக மொத்தம் ரூ.286.91 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
இதனை வைத்து பாதிக்கப்பட்டோருக்கு நிதி வழங்குதல், பாதிக்கப்பட்ட இடங்களை மேம்படுத்துதல் என பல சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட சாலைகளை நிரந்தரமாக சீரமைக்க ரூ.392 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சர் பங்கேற்கும் பாப்பாபட்டி கிராமசபை கூட்டம் - பின்னணி என்ன?