தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் நாளை (ஆக.13) காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக எம்எல்ஏகளின் இருக்கை முன்பு கணினி வைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் இதில் என்னென்ன அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 37 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிடமாற்றம்