ETV Bharat / state

TN Budget 2023 : தமிழ் வளர்ச்சி, பண்பாட்டு துறைக்கான சிறப்பு அறிவிப்புகள்!

கடல் கடந்து சோழப் பேரரசை நிறுவி நூற்றாண்டு ஆட்சி செய்த சோழ மன்னர்களின் பெறுமையை போற்றவும் பழங்கால நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 20, 2023, 12:03 PM IST

சென்னை: 2023 - 24 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது அவர், கடல் கடந்து சோழப் பேரரசை நிறுவி நூற்றாண்டு ஆட்சி செய்த தமிழ் மன்னர்களின் பெறுமையை போற்றவும், பழங்கால நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உள்ளார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

தாய் தமிழை காக்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இன்னூயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து நடராசன், ஆகியோரின் பங்களிப்பை போற்றும் வகையில் சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தையும் முற்போக்கு சமத்துவ இந்தியாவின் சிற்பியுமான அம்பேத்கரின் சிந்தனைகளை பரப்புவதற்காக, அவரது படைப்புகளை தமிழில் மொழி பெயர்க்கப்படும் என்றும் இதற்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

தொழில்நுட்ப துறையில் தமிழ் மொழியின் பயன்பாட்டினை அதிகரிக்க புகழ் பெற்ற வல்லுநர்களை கொண்டு தமிழ் கணினி பன்னாட்டு மநாடு நடத்தப்படும் என்றும் இதன் மூலம் தமிழ் மொழியில் பெருமளவில் மென்பொருட்கள் உருவாக்கப்படுவதை இது ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடல் தாண்டி கொடி நாட்டி தமிழர் பெருமை கூறும் பண்பாட்டு விழுமியங்களை எடுத்தியம்பும் வகையில் தமிழர் பண்பாட்டுத் தலங்களை இணைக்க தமிழ் பண்பாட்டு கடல் வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழிக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை கருத்தில் கொண்டு வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டை வழங்கி வரும் நிலையில், வரும் நிதி ஆண்டில் மேலும் 591 தமிழ் அறிஞர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பார் போற்றும் தமிழர் கலை பண்பாட்டை இளைய தலைமுறை அறிந்து கொள்ளும் வகையில் சென்னையில் நடைபெறும் சங்கமம் கலை விழா மேலும் எட்டு முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் கலைகளை பேணி காப்பதற்கும், தமிழ் மக்களின் பண்பாட்டை பிரதிநிதித்துவப்படுதுவதற்கும் இந்த திட்டம் ஊக்கமளிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டுப்புற கலைகளை பாதுகாக்கும் வகையிலும், தமிழர் பண்பாடு வாழையடி வாழையாக செழித்து ஓங்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 25 பகுதி நேர நட்டுப்புறக் கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

கடல் பல கடந்து சமர் பல வென்று, இந்தியாவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் பெரும் நிலபரப்பை பல நூற்றாண்டுகள் ஆட்சி செய்த பெருமைக்குரிய சோழப் பேரரசின் கலை, இசை, கட்டடக் கலை, சிறபக் கலை, கைவினை, நடனம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் பங்களிப்பை போற்றும் வகையில் பழங்கால கலைப் பொருட்கள், நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: TN Budget 2023: தமிழ்நாடு பட்ஜெட் 2023 -24: லைவ் அப்டேட்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.