தமிழ்நாட்டில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வார்டு வரையறை முறையாக முடியாமல் தேர்தலை நடத்தக்கூடாது என்று திமுக உட்பட பல்வேறு எதிர்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. ஆனால், தேர்தலை நடத்த தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துதல், மாவட்ட அளவில் தேர்தல் பார்வையாளர்கள் நியமித்தல், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், வேட்பாளர்கள் செலவினம் தொடர்பான பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து 27 மாவட்ட ஆட்சியர்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: விமான நிலையத்தில் காவலன் எஸ். ஓ. எஸ் செயலி விழிப்புணர்வு!