ETV Bharat / state

தமிழ்நாட்டில் மின் கட்டண மோசடி... டிஜிபி எச்சரிக்கை... - electricity bill scam in tamil nadu

மின் கட்டண மோசடி தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டிஜிபி  எச்சரிக்கை
டிஜிபி எச்சரிக்கை
author img

By

Published : Oct 21, 2022, 10:59 AM IST

சென்னை: மின்சார கட்டண மோசடி தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்துவரும் நிலையில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சமூக வலைதளத்தில் இதுகுறித்த எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்கள் வீட்டில் மின்சாரம் கட்டணம் கட்டவில்லை. இன்றிரவுக்குள் உங்கள் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்படும். உடனடியாக இந்த நம்பரை காண்டக்ட் செய்யுங்கள் எனக்கூறி செல்போனிற்கு சிலர் குறுந்தகவல் அனுப்ப வாய்ப்புள்ளது. அப்படி வந்தால் அதில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி, மின்சார கட்டணம் செலுத்த நாங்கள் உதவி புரிகிறோம் என்று சிலர் பதிலளிப்பர்.

டிஜிபி எச்சரிக்கை

அதன் பிறகு மின்சார ஊழியர் பேசுவது போல பேசி உங்களது மின்சார எண், கட்டணம் உள்ளிட்டவற்றை நம்புவது போல கச்சிதமாக தெரிவித்து, நாங்கள் அனுப்பும் ஒரு ஆப்பை பதிவிறக்கம் செய்து அதில் 10 ரூபாய் செலுத்தினால் போதும் இதுபோன்ற பிரச்சனை மீண்டும் ஏற்படாமல் பார்த்து கொள்வதாக அவர்கள் கூறுவர்.

இதனை நம்பி ஆப் மூலமாக 10 ரூபாய் செலுத்தினால், உங்களது வங்கி கணக்கின் விவரங்களை அவர்கள் திருடி வங்கியில் உள்ள அனைத்து பணத்தையும் மோசடி நபர்கள் கொள்ளையடிப்பார்கள். ஆகவே, இப்படி யாரேனும் உங்களிடம் தெரிவித்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதேபோன்ற மோசடி சமீபகாலமாக அதிகரித்து வருவதாகவும், இந்த மோசடி நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து மத அமைப்புகள் உள்பட யாருக்கெல்லாம் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது - டிஜிபி கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.