இது குறித்து அவர் கணொலி பதிவில், "கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகளில் 24 மணி நேரமும் சிறப்பாக செயல்பட்டுவரும் இருபால் காவலர்களையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவல் துறையினருக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறார்.
காவல்துறையினர் தங்களது உடல் நலனையும், தங்களது குடும்பத்தாரின் நலத்தையும் பாதுகாப்பது எங்களது கடமை. அவர்களின் குடும்பத்தார் நலமாக இருந்தால்தான் காவல் துறையினர் கவலையில்லாமல் உழைக்க முடியும். களப்பணியாற்றி வந்த காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று பரவியிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலமுடன் இருக்கிறார்.
கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அனைத்து காவலர்களும் முகக் கவசம், கையுறை, சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். கரோனா பரவலை முழுவதுமாக அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு காவல்துறை வெற்றி பெறும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காவல்துறை வாகனங்களுக்குக் 'காவல்' என தமிழில் பெயர் மாற்றம்!